குறைக்கப்பட்ட பாடங்களை உடனே தொிவிக்க வேண்டும் மூடப்பட்ட பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும், கல்வியமைச்சருக்கு மாநில பொதுச்செயலாளா் கோாிக்கை

குறைக்கப்பட்ட பாடங்களை உடனே தொிவிக்க வேண்டும் மூடப்பட்ட பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும், கல்வியமைச்சருக்கு மாநில பொதுச்செயலாளா் கோாிக்கை


அனுப்புதல் ....
கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
எண். 6 .ஏகாம்பரம் தெரு .
பம்மல் (.அஞ்சல்). பல்லாவரம்(வட்டம்).
சென்னை .75. கைப்பேசி எண்..
 9443964053.
Email I'd
matriculationnews2011@gmail.com.


பெறுதல்.....
 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள்.
தமிழ்நாடு அரசு. தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை. சென்னை. 9.


பொருள்....இந்த கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் திறந்து பாடம் நடத்தாததால் மாணவர்களுக்கு மன உளலச்சலை குறைக்கும் பொருட்டு
 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை வல்லுனர் குழு வழிகாட்டுதல் படி 40 சதவீதம் குறைத்துள்ளதை உடனடியாக அறிவிக்க வேண்டி வேண்டுதல் விண்ணப்பம்.


ஐயா வணக்கம்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றித் தந்த எங்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு .கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும் மாண்புமிகு. தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும் .....
எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை என்றென்றும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.


இந்த கொடிய கொரோனா நோய்தொற்று காலத்தில்கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்காமல் பாடம் நடத்தாமல்  மாணவர்கள் படித்ததை மறக்காமல் இருக்க நாளும் படிப்பதை உறுதி செய்ய இணையதள வழியாக கல்வியை நடத்தி வந்தோம். 


இந்நிலையில் எப்போது பள்ளி திறக்கும் என்கிற எண்ணமும் சிந்தனையும் இல்லை.நோய்தொற்று குறைந்து மாணவர்கள் பாதுகாப்பாக உள்ள சூழ்நிலையில் தான் பள்ளிகள் திறக்கும் என்று தங்கள் நாள்தோறும் அளிக்கும் பத்திரிக்கையாளர் பேட்டிகளில் வருவதையும் பார்த்து வருகின்றோம்.


பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் பெற்றோர்கள் பணம் கட்ட மறுக்கும் சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக ஏழை மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல்  கல்வி கற்பதை உறுதி செய்திட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்களை வாங்கி முழுவதுமாக பாடங்களை நடத்தி காலாண்டு தேர்வையும் தனியார் பள்ளிகள் நடத்தி முடித்து விட்டோம். 


டிசம்பரில் அரையாண்டுத் தேர்வும் ஏப்ரலில் முழு ஆண்டு தேர்வு நடத்த வேண்டும். அதற்குள்ளாக பாடச்சுமையைக் குறைப்பதற்காக கல்வியாளர்களின் வேண்டுகோளை ஏற்று வல்லுநர் குழுவை அமைத்து 40% பாடத்திட்டத்தை குறைந்துள்ளதாக மாண்புமிகு. தமிழக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக நாளும் பத்திரிகையில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 


இந்த சூழ்நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடங்களைஎவ்வளவு குறைத்துள்ளீர்கள்.... பக்க வாரியாக எந்த எந்த பாடங்களை எவ்வளவு குறைத்து உள்ளீர்கள் தேர்வுக்கு உகந்தவைகள் யாவை என தெளிவாக விலக்காமல் இன்னும் காலதாமதம் செய்வது நமது புதிய கல்வி பாடத்திட்டக்கல்வியையே கேள்விக்குறி ஆகியுள்ளது.


அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு தேர்வு உண்டா இல்லையா அல்லது கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ஆல் பாஸ் என்று அறிவிக்க போகிறீர்களா மாணவர்களின் கல்வித் தரம் குறைந்தது 10.. 11.. 12..ஆம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு உண்டா இல்லையா என்று பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதனால் மேற்கண்ட நாங்கள் அனைவரும் மிகுந்த மன உலைச்சலில் சிக்குண்டு என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம்.


எனவே மாணவர்களின் மன குறையை போக்க பாடச் சுமையை குறைத்து உடனடியாக பாடத்திட்டம் குறைப்பு சம்பந்தமாக சரியான தெளிவான விளக்கத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.


அதேபோல் பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு அதை தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது மீண்டும் பரிசீலனை செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து சுற்றுப்புற சுகாதாரம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு 9. 10 .11. 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம்
பாட சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு படித்ததை மறக்காமல் இருக்க நாளும் படிப்பதை உறுதி செய்திட மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு தேர்வு பயம் போக பாடங்கள் குறைப்பு சம்பந்தமான உண்மை அறிக்கையை வெளியிட்டு மற்ற மாநிலங்களைப் போல் பள்ளிகளை திறந்திட ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.


நன்றியுடன்


தங்கள் உண்மையுள்ள 
கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்


நாள் 10 .10 .2020 பம்மல் சென்னை . 75.