DTCP பிரச்சனை தீா்ந்து விடும்

DTCP பிரச்சனை தீா்ந்து விடும்



தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கைகள் போராட்டங்கள் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் 2011 க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளி பழைய  கட்டிடங்களுக்கு டிடிசிபி பெற விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் 15,000 சதுர அடி வரை மட்டுமே கொடுத்த கட்டிட அனுமதி தற்போது 2 லட்சம் சதுரடி வரை கட்டிட அனுமதி வழங்க அந்தந்த மாவட்ட வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிக் குழுமம் டிடிசிபி அலுவலகமே கட்டிட அனுமதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பால் வார்த்து உள்ளது.


இனி அதிகபட்ச கட்டிட அனுமதிக்காக சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.... என்ற புதிய உத்தரவை பள்ளி நிர்வாகிகள் பார்வைக்கு இன்றைக்கு அனைத்து பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துள்ள செய்திகளை பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்.


பாசத்துடன் உங்கள் 
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.