திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தலைவர் பேராசிரியர் ஸ்ரீ வேலுசாமி அவா்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி....
திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தலைவர் பேராசிரியர் ஸ்ரீ வேலுசாமி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் எனகிற துக்ககரமான செய்தி கேட்டு என் உள்ளம் துடிதுடித்தது .
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனைகளை வெளிப்படுத்துகிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி...
அவர் கனவு மெய்ப்பட அவர் நடத்தி வந்த சிஷ்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மேலும் மேலும் சிறந்து உயர்ந்து ஒளி வீசிட என்றைக்கும் அப்பள்ளியின் வளர்ச்சியில் நமது சங்கம் துணை நிற்கும் என்று உறுதி கூறுகின்றோம் .
மீளாத் துயரில்
கே.ஆர். நந்த குமார் மாநில பொதுச்செயலாளர்.
சண்முகம் சாமுவேல் மாவட்ட தலைவர்
எனது கல்லூரி கணித பேராசிரியர் அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் SKV Matric பள்ளியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்