அனைவருக்கும் சமமான சட்டம் வேண்டும், தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும், தமிழக ஆளுநருக்கு பொதுச்செயலாளா் கோாிக்கை

அனைவருக்கும் சமமான சட்டம் வேண்டும், தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும், தமிழக ஆளுநருக்கு பொதுச்செயலாளா் கோாிக்கை


அனுப்புதல் .
கே ஆர் நந்தகுமார்


மாநில பொதுச் செயலாளர்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் . கதவு எண் .6 ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை. 75. 


பெறுதல் ...


மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள்


ஆளுநர் மாளிகை கிண்டி .சென்னை. 


பொருள் ....
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்ததை தமிழகத்தில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தற்போதுள்ள அரசாணைக்கு மேதகு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் ஆணை பிறப்பிக்க கூடாது என்ற எதிர்ப்பையும் பதிவு செய்து அனைவருக்கும் சமமான நீதி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.... என்று வேண்டி விண்ணப்பம் .


மேதகு தமிழக ஆளுநர் அய்யாஅவர்களுக்கு...வணக்கம்... 


தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரியில் சேர முடியாது என்பதால் தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து அதை அரசாணையாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் எழுதி கையொப்பமிட்டு அரசாணை வெளியிட திட்டமிட்டு உள்ளது. 


நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் பிறந்து தமிழக அரசின் பாடத் திட்டத்தை பயின்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 
ஒரே மாதிரியான சட்டதிட்டங்கள் இயற்ற வேண்டும். 


அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணெய் வைக்கக்கூடிய வேலையை தமிழக அரசு  செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி குறைந்தபட்சம் அரசு பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவ கல்லூரி சேர்க்கையில் இந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று  எமது ஆட்சேபணைகளை தங்கள் முன் வைத்திருக்கிறோம். அதன் அடிப்படையிலும் அதற்கு ஆளுநர் அவர்கள் கையொப்பமிட மறுத்து வருகிறார் .   


இன்று கூட தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநரை சந்தித்து தமிழ்வழி அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கையொப்பமிட வலியுறுத்துகிறார். 


தமிழகத்தில் பிறந்த அனைவருக்கும் தகுதிக்கும் திறமைக்கும் பொதுவான சட்டத்தை இயற்ற வேண்டும். தேர்தல் லாபம் கருதியும் சுயநலத்தோடு ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும்  உதிரிகட்சிகளும் இணைந்து தமிழக மாணவர்கள் அனைவரின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதை விடுத்து தவறான முன்னுதாரணங்களை முன் வைக்க வேண்டாம் .


நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் வெறும் 180 பேர் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார்கள் என்றால்  அரசு  பள்ளியின் கல்வியின் தரமும் கற்பித்த அவர்களின் கடமை தவறிய நிலையில் இனி எப்படி கற்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் எடுத்திட வேண்டும். 


அதை விடுத்து தனியார் பள்ளி மாணவர்களின் நிர்வாகத்தின் மீது மட்டும் குறைகளைச் சொல்லி தகுதி இல்லாதவர்கள் தரமான மாணவர்களால் தான் தகுதியான மருத்துவர்களாக முடியும் என்பதை உணர்ந்து அரசு பள்ளி தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்துவகை மாணவர்களின் நலன் கருதி 7.5% இட ஒதுக்கீடு அனைவரும் வழங்குவது மட்டும் தான் நல்ல அரசின் கடமையாகும் என்பதை உணர்ந்து பாரபட்சமில்லாமல் பகுத்தறிவோடு அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை குறிப்பாக மேதகு தமிழக ஆளுநர் அவர்களை பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்....


எங்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து நிர்ப்பந்தத்தின் பெயரால் அரசாணை வெளியிட்டால் எங்கள் மாநில சங்கம் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் தடையாணை பெற்று தமிழக தனியார் பள்ளி மாணவர்களின் உரிமைகளை நிலை நாட்டுவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம். என்றும் எல்லோருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் 


கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்