2021 ஆம் ஆண்டுக்குரிய சங்க காலண்டரை உடனே அச்சடித்து மாட்டுங்கள்......

2021 ஆம் ஆண்டுக்குரிய சங்க காலண்டரை உடனே அச்சடித்து மாட்டுங்கள்......


மரியாதைக்குரிய மாநில மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.


நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.


2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வர உள்ளது 


2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் நாம் வழக்கம்போல் அச்சடித்து அனைவருக்கும் வழங்கும் நாட்காட்டி காலண்டரை நமது மாநில சங்கத்தின் பெயர் விலாசம் போட்டு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ..எண் ..6. ஏகாம்பரம் தெரு பம்மல். சென்னை 75. என்ற தலைமை அலுவலக முகவரியோடு உங்கள் மாவட்ட தலைவர்கள் பெயர் செல்போன் நம்பர் மாவட்ட அலுவலக விலாசம் அல்லது மாநில தலைமை அலுவலகம் விலசத்தோடு மட்டுமாவது கட்டாயம் 2021 ஆம் ஆண்டு காலண்டர் அச்சடித்து உங்கள் மாவட்டத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் எல்லா அலுவலகங்களிலும் மாத காலண்டராகவோ நாட்காட்டியாகவோ மாட்டியிருக்க வேண்டும்.


 அதன்மூலம் நமது சங்கத்தின் வலிமை மட்டுமல்ல உங்களுடைய பலமும் கூடும் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும்.


 நாம் தான் மாநில சங்கம் என்பதை உறுதி செய்ய முடியும். தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து அலுவலகங்களிலும் அவசியம் வரும் ஆண்டு காலண்டர் இருப்பதற்கான பணிகளை இன்றே இப்பொழுதே மாநில மாவட்ட தலைவர்கள் செய்யத் திட்டமிடுங்கள். செய்து காட்டுங்கள். 


இப்பொழுது சரியான நேரம் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம். பின்னர் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும். 


குறைந்தது ஒரு மாவட்டத்திற்கு 500 காலண்டராவது அவசியம் அச்சடித்து அனைத்து அலுவலகங்களிலும் மாட்டியிருக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.


 காலண்டரில் அவசியம் கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.
பேராசிரியர் ஏ.கனகராஜ் மாநில தலைவர்.முனைவர். ஆர். நடராஜன் மாநில பொருளாளர் ஆகியோர் படங்களும் பெயர்களும் சங்கத்தின் லோகோ இடம் பெற்றிருக்க வேண்டும்.


மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாநில துணை தலைவர்கள் துணைச் செயலாளர்கள் அமைப்பாளர்கள் பெயர்களையும் அவசியம் போட வேண்டும்.


 இதில் எந்தவித கோஸ்டி பிரச்சினைகளும் தயவுசெய்து வந்துவிடக்கூடாது. மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள்.
சங்கத்தினுடைய லோகோ இத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன்.


அன்புடன் உங்கள்


கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.