விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர்அங்கீகார ஆணை வழங்கும் விழா
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் உயர்திரு கே ஆர் நந்தகுமார் ஐயா அவர்களின் பெரும் முயற்சியினால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர்அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா புதன்கிழமை காலை 9 மணி அளவில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகா அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதையும் அதில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் தலைமையிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் உயர்திரு கண்ணப்பன் ஐயா அவர்கள், முனைவர் ஆ. கருப்பசாமி அவர்கள், மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலமையில் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அனைத்து பள்ளி தாளாளர்களும் மிக்க மகிழ்வோடு அங்கீகார ஆணையை பெற்று சென்றனர். மேலும் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ,துணை தலைவர் கு பாரி குஞ்சிதபாதம் அவர்கள் நமது கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்ட சங்க தலைவர்கள், செயலாளர்கள், மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.தொடர் அங்கீகார ஆணை வழங்கிய போது எடுத்த படம்........