ஒட்டாத சுவரொட்டிகளை உடனே ஒட்டுங்கள்.....
சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
அன்புள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய மாலை வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
நமது சங்கத்தின் சார்பில் வருகின்ற 21 ஆம் தேதி நடைபெறும் கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மாவட்ட தலைவர்களும் சுவரொட்டியை தயாரித்துள்ளதற்கும் பல மாவட்ட தலைவர்கள் சுவர்களில் ஒட்டி உள்ளதற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டாத மாவட்ட தலைவர்கள் உடனே சுவர்களில் ஒட்டி புகைப்படம் எடுத்து மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை நமது மாநில சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளது.
ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கி 40 சதவீதம் ரூபாய் 48 கோடி நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுவித்து இன்று அரசாணை வெளியிடுவதாக மெட்ரிக் பள்ளி கல்வி இயக்குனர் நேற்றைய பேச்சு வார்த்தையில் உறுதியளித்துள்ளார்.
அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் உடனடியாக தொடர் அங்கீகாரம் கோரி 4 சான்றுகளுடன் விண்ணப்பித்தால் உடனே தொடர் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இன்ன பிற கோரிக்கைகள் சம்பந்தமாக திங்கட்கிழமை பள்ளி கல்வி ஆணையாளர் அலுவலகத்தில் நமது சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை
உறுதியாக போராடுவோம்.
டி.சி.இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை செய்யக்கூடாது
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கை களுக்காக போராடுவோம் வெற்றி பெறுவோம் வாரீர் என்று வணங்கி வரவேற்கிறேன்.
நன்றியுடன்.
கே.ஆர்,.நந்தகுமார்.
மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்