அனுமதியின்றி செயல்படும் அரசுப்பள்ளி நடவடிக்கை எடுப்பது யாா்...?

அனுமதியின்றி செயல்படும் அரசுப்பள்ளி நடவடிக்கை எடுப்பது யாா்...?



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களத்தூர் கிராம ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்பப்பள்ளியில் இன்று  குழந்தைகளை வரவழைத்துபள்ளியில் அமர வைத்து பாடம் நடத்தும் காட்சியை அனைவருக்கும் பகிர்ந்து இருக்கின்றோம்.


 அரசுப் பள்ளிகளில் இந்தக் கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்தில் குழந்தைகளை வைத்து பாடம் நடத்தினால் அரசாங்கம் ஒன்றும் செய்யாது தனியார் பள்ளியை திறந்து இருந்தால் இப்படி அமர வைத்து பாடம் நடத்தினால் இதற்குள் எத்தனை பொய் பிரச்சாரங்கள் எவ்வளவு பொய் செய்திகள் பள்ளிக்கு சீல் வைத்து எல்லா பத்திரிக்கை தொலைக்காட்சியிலும் செய்தியாக போட்டிருப்பார்கள்.



 ஏன் இந்த பாகுபாடு ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணெய் வைத்து பாரபட்ச தோடு நடத்தும் கல்வித்துறை அதிகாரிகள் பார்வைக்கு பாரபட்சமான தீர்ப்பு வழங்காமல் நீதி கேட்டு இந்த கண்கொள்ளா காட்சியை சமர்ப்பிக்கின்றோம்.