அங்கீகார ஆணையை பெற தயாா் ஆவோம்...,!
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
நமது சங்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட செய்தி தமிழ்நாடு முழுக்க அனைத்து ஊடகங்கள் மற்றும் BEO DEO CEO மற்றும் அனைத்து அலுவலகங்கள் முன்பு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் நமது தொடர் கோரிக்கை விண்ணப்பங்கள் மூலம் அரசுக்கு எட்டியுள்ளது அதன் பலனாக ஆர் டி இ கல்விக் கட்டண பாக்கி 40 சதவீத தோடு நமக்கு தொடர் அங்கீகாரத்தை 12..10. 2020 க்குள் விண்ணப்பிக்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் உடனடியாக தரச்சொல்லி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன் நகலை தங்கள் அனைவருக்கும் அனுப்பி உள்ளேன் உடனடியாக பள்ளி நிர்வாகிகள் அனைவரும் விண்ணப்பித்து தொடர் அங்கீகாரத்தைமாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கைகளாலேயே செலவில்லாமல் பெற்றுக் கொள்ள தயாராவீர்.
மீதம் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நமது போராட்டம் தொடரும். சுவரொட்டிகள் ஒட்டாதவர்கள் உடனே ஒட்ட வேண்டும்.
நமது வலுவான போராட்டத்தை வேகப்படுத்துங்கள்....
21 ஆம் தேதி சென்னையில் சந்திப்போம்.
அதற்குள் நீங்கள் பள்ளி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி நமது போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்.
அன்புடன் உங்கள்
கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்