பள்ளிக் கல்வி அமைச்சா் மற்றும் இயக்குனா் பெருமக்களை சந்தித்து கோாிக்கைகளை வென்ற சங்க நிா்வாகிகள்...
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இன்று சென்னை பள்ளிக்கல்வி ஆணையாளர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகளான *2018.19ஆம் ஆண்டுக்கான ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கி 40% உடனே தரவும்
*அனைத்து பள்ளிகளுக்கும் 20.10.2020க்குள் தொடர் அங்கீகாரம் வழங்கவும் அரசாணை வெளியிட்டு
மீதமுள்ள கோரிக்கைகளான *2019. 20 ஆர்.டி .இ கல்வி கட்டண பாக்கியும் ...
*டி.சி. இல்லாமல் மாணவர்களை சேர்க்க கூடாது என்கிற கோரிக்கையும்
*தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான
தனி இயக்குனர் அலுவலகத்தை தொடங்க வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டியும்
*நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்
*அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவும்
*அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவும்
*அக்டோபர் மாதம் முதல் வாரம் அனைத்து பள்ளிகளையும் படிப்படியாக திறக்கவும் வேண்டி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும் உயர்திரு பள்ளிக்கல்வி ஆணையாளர் பள்ளிக்கல்வி இயக்குனர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் தொடக்கக்கல்வி இயக்குனர் கல்விக்கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதியரசர் மற்றும்
*மூன்றாண்டுகளுக்கு சுகாதார சான்று தீயணைப்பு துறை தடையின்மை சான்று பள்ளி கட்டிடங்களுக்கான
சொத்து வரி கட்டிடவரி பள்ளி பேருந்துகளுக்கான
இருக்கை வரி இன்சூரன்ஸ் தகுதிச் சான்று புதிதாக ஜிபிஆர்எஸ் கருவி சிசிடிவி கேமரா வேகக்கட்டுப்பாட்டு கருவி ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஆர.டி.ஓக்கள் சொல்கிற கடைகளில் தான் அதிக விலைக்கு வாங்கி ஒட்ட வேண்டும் என்பதை கைவிடக் கோரியும் போக்குவரத்து அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கியும்....
* நமது சங்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே.ஆர்.நந்தகுமார். மாநில துணைத் தலைவர் ஜே.பி. விமல் திருவள்ளூர் மாவட்ட தலைவர் முனைவர் ராஜன் மாவட்ட செயலாளர் முனைவர். மணிவண்ணன் துணை தலைவர் சிமியோன் துணைச் செயலாளர் செபாஸ்டியன் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நசீர் திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நியூ பாரத் முரளி தென்காசி மாவட்ட செயலாளர் அக்கீம் சிறுபான்மை பிரிவு தலைவர் விஜயகுமார் லோகியா மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் சாரநாத் பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி நமது கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் உறுதி அளித்ததின் பேரில் நன்றி கூறி விடைபெற்றோம் என்ற இன்றைய சங்கத்தின் நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு அன்போடு சமர்ப்பிக்கின்றோம்.
பள்ளி நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உங்கள் பள்ளியின் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு வேண்டிய நான்கு சான்றுகளை வாங்கி சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேரில் கொண்டு போய் கொடுத்து ஆன்லைனேக்காக காத்திருக்காமல்
அக்டோபர் மாதம் 20-ம் தேதிக்குள் உங்கள் அங்கீகாரத்தை மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே நேரடியாக ஒரு பைசா செலவில்லாமல் தருவதற்கு ஒத்துக்கொண்டார்.
எனவே பள்ளி நிர்வாகிகள் யாரும் எதற்கும் பயப்படாமல் லஞ்சம் கொடுக்காமல் உங்கள் அங்கீகாரத்தை பெறுவதற்கு நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும்.
அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தெரிவித்தால் மாநிலத் தலைமை உடனடியாக சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பேசி உங்களுக்குரிய தொடர் அங்கீகாரம் கிடைக்க ஆவண செய்யப்படும்.
இது குறித்தெல்லாம் இன்றைக்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம். அச்செய்தி அனைத்து ஊடகத்திலும் ஒலி பரப்பி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
நம்பினோர் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.
தங்கம் செய்யாததை நமது சங்கம் செய்யும் இது வரலாறு.
அசாதாரணமான வகைகளை கூட சாதாரணமாக சாதனைகளாக மாற்ற வல்லதுதான் நமது மாநில சங்கம்.
நாம் சொல்வதை தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்.
இது 30 ஆண்டு கால சங்கத்தின் வரலாறுகளில் எண்ணற்ற சாதனைகளில் இதுவும் ஒன்று .
இந்த வாரம் ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கியை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆம்... என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பதை பள்ளி நிர்வாகிகள் மறக்காமல் இருந்தால் அதுவே யான் பெற்ற பெரும் பேறாகும்
என்றும் தனியார் பள்ளிகள் நலம் நாடும் உங்கள்
கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.