கண்டனம், கண்டனம் கீழ்த்தரமான அனைத்து அரசு ஊழியர்களுக்கும்   கண்டனம் , கண்டனம் 

கண்டனம், கண்டனம் கீழ்த்தரமான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 
 கண்டனம் , கண்டனம் 




பள்ளி கல்வித்துறையில் உள்ள CEO, DEO, Block BEO, BRC Officers, BRTE Officers, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஆசிரியர்கள் அனைவருக்கும் கண்டனம், கண்டனம் 


தனியார் பள்ளிகளின் மாணவர்களை Online  EMIS பதிவேட்டில் இருந்து திருடி தங்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்துக்கொண்டிருக்கும் கீழ்த்தரமான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 
 கண்டனம் , கண்டனம் 


மிகப்பெரிய கொரோனா நோய்தொற்றினால் நாடே முடங்கி போய் கொண்டிருக்கும் நிலையில்


தனியார் பள்ளிகளின் தாளாளர்களும், ஆசிரியபெருமக்களும் ஒரு வேளை சோற்றிற்கு அல்லல் பட்டுகொண்டிருக்கும் இந்த கொடுமையான வேளையில் 


கழுகு கூட்டத்தைபோல நமக்கே தெரியாமல் நமது பள்ளி EMIS Portal இருந்து மாணவர்களை திருடி கயவர்கூட்டம்போல் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.


அப்போது நமது பள்ளிக்கு எதற்கு User ID , Password.
அல்லும் பகலும் நாம் உழைத்து ஒவ்வொரு மாணவருடைய, பெற்றோருடைய விவரங்களை சேர்த்து Upload செய்து வைத்தால், இவர்கள் நோகாமல் திருடி அரசுப்பள்ளியில் அரிசிக்கும், பருப்புக்கும் கணக்கு காண்பித்துவிடுவார்கள்.


அரசு பள்ளி ஆசிரியர்களே அதிகாரிகள் துணையோடு திருட்டுக்கு துணைபோகும் கேவலமான செயலுக்கு கண்டனம் , கண்டனம் 


அனைத்து பள்ளி தாளாளர்களே, நாம் கவனமாக இருத்தல் அவசியம்.
இப்படியே இருந்தால் இவர்கள் இதையும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்.


யாரும் EMIS Portalல் Promotion கொடுக்க வேண்டாம். Terminal Classக்கு மாற்றம் செய்ய வேண்டாம்.


ஆயிரக்கணக்கில் கல்விக்கட்டண பாக்கியை வைத்துக்கொண்டிருக்கும் மாணவர்களை நாம் என்னதான் செய்வது.


விரைவில், தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து BRC அலுவலுகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியாக வேண்டும்.


விரைவில் ஆர்ப்பாட்ட  தேதி முடிவு செய்துகொள்வோம்.


அனைத்து நிலை பள்ளி தாளாளர்களும், சங்க வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயல்படுவோம்.


 Dr.R.கோபிநாத் 
     9443520978
 மாநில தலைமை நிலைய செயலாளர் 
 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ  பள்ளிகளின் சங்கம்