நமது ஒற்றுமையே வெற்றிக்கு காரணம். தொடா்ந்திருங்கள் தொல்லைகளை மாற்றலாம்.....!
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நான்தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
EMIS நம்பரை திருடி
டி.சி இல்லாமல் மாணவர்களைச் சேர்க்கும் மடமைக்கும் அரசே சட்டத்தை மீறும் செயலை வன்மையாக கண்டித்து பதிலளிக்கும் வகையில் தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசிக் கொண்டு இருக்கின்றேன்.
நமது சங்கத்தின் தொடர் கோரிக்கைகளை ஏற்று வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10 11 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படிக்க இன்று அரசாணை
எண் 523 வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாணையை அனைவருக்கும் அனுப்பியுள்ளோம்.
நேற்று கல்விக்கட்டணம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்து 40% கல்வி கட்டணம் செலுத்துவதற்கு இனியும் கால அவகாசம் தர முடியாது... என்று நீதியரசர் நிச்சயமாக கூறிவிட்டார்.
ஆர். டி. இ கல்வி கட்டண பாக்கி சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது விசாரணையில் 2019 20 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டண பாக்கியை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்குள் மொத்தத் தொகையையும் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்..தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் 3 மாதங்கள் அவகாசம் கேட்டு முடியாது என்று நீதியரசர் மறுத்துவிட்டார்.
2018 ..19 இல் யார் யாருக்கெல்லாம் கல்வி கட்டண பாக்கி வரவில்லையோ அவர்கள் உடனடியாக வங்கி சேமிப்பு கணக்கு பாஸ் புத்தகத்தின் நகலை சமர்ப்பித்து மீண்டும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நீதிப்
பேராணையும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறது அதை ஆர்.டி.இ கல்வி கட்டணமாக தர வேண்டும் என்கிற வழக்கு இறுதி விசாரணை 24.10.2020 அன்று முழு கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
பள்ளி வாகனங்களில் சாலைவரி இருக்கை வரி இன்சுரன்ஸ் எப் சி இன்ன பிறவற்றை ஓடாத காலங்களுக்கு கேட்கக்கூடாது என்கிற வழக்கில் 29.10 .2020. இல் நீதிபதி அவர்கள் இறுதித் தீர்ப்பு வழங்கிட நாள் குறிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களுக்காகவும் பள்ளி மேம்பாட்டுக்காகவும் கடன் வாங்கி வட்டியும் தவணையும் கட்ட முடியாதவர்கள் உடனடியாக உங்கள் பள்ளியின் பெயர் எந்த அரசு மற்றும் தனியார் வங்கியில் கடன் வாங்கிநீர்கள் அதன் விவரம் எவ்வளவு பணத்தை கடனாக வாங்கி உள்ளீர்கள் எத்தனை மாதங்கள் தவணைத் தொகை கட்டவில்லை மீண்டும் எப்பொழுது கட்ட முடியும் என்பதனை தெளிவாக சொன்னால் வட்டியில்லாமல் தவணைகளை கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுடன் மத்திய நிதி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலோடு வழக்காட உள்ளோம். சம்பந்தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் உடனடியாக மேற்கண்ட தகவல்களை தந்தால் 100% உங்களை பாதுகாத்து உங்கள் ரகசியங்களை வெளியிடாமல் உங்களை உயர்த்துவதற்கு இந்த மாநில சங்கம் உதவி புரியும் என்று உறுதி கூறுகின்றேன். அதுவரை பள்ளி நிர்வாகிகளை மிரட்டுவது பள்ளி வாகனங்களை எடுத்துக்கொண்டு போவதை யாரும் அனுமதிக்காதீர்கள்.
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே. ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.