பள்ளிகளை திறக்க தயாா் ஆவோம்...! மாணவா்களின் பாதுகாப்பையும் தரமான கல்வியையும் உறுதிப்படுத்துவோம். பொதுச்செயலாளா் வேண்டுகோள்...!!
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்காமல் பாடங்கள் நடத்தாமல் மாணவர்கள் சேர்க்கையை செய்ய முடியாமல் திண்டாடி வந்தோம்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று படிப்படியாக பள்ளிகள் துவங்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து பல மாநிலங்களில் கடந்த 21ம் தேதியே பள்ளிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறந்து பாடங்களை நடத்த தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் நேற்று வெளியிட்ட அரசாணை எண்.523 ன் படி வருகின்ற ஒன்றாம் தேதி முதல் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் கட்சி அடிப்படையில் இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகளை நடத்தவும் மூன்று நாட்கள் இணைய வழி வகுப்பும் மூன்று நாட்கள் பள்ளி வழிவகுப்பும் சமூக இடைவெளி விட்டு சுகாதார நடவடிக்கை களோடு மாணவர்களின் காய்ச்சலை பள்ளி நுழைவாயிலில்வெப்பமானியை வைத்து 37.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பநிலை காட்டும் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது. மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு தகவல் தரவேண்டும்.
மாணவர்கள் நுழைவு வாயிலில் வைத்தே பரிசோதனை செய்து முககவசம் அணிந்து உள்ளே நுழையும் போதும் வெளியே போகும்போதும் கைகால்களை சுத்தப்படுத்தி குடிநீர் கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி ஒரு மாணவனுக்கு கூட நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதி உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் அனுமதி கிடையாது. பெற்றோர் மற்றும் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் 50 சதவீதம் என்ற அளவில் மட்டுமே பணிக்கு வர வேண்டும். பயோமெட்ரிக் பயன்படுத்தக்கூடாது. ஏ.சி வசதியை பயன்படுத்த கூடாது. விளையாட்டுக்களின் போது கூட்டம் கூட கூடாது. மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்களை கிருமி நாசினியை கொண்டு நாள்தோறும் சுத்தம் செய்து சுகாதார விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூரிலிருந்து வரும் மாணவர்களை அரசு விதிமுறைப்படி தனிமைப்படுத்தும் நாட்களை கடந்த பின் பள்ளிக்கு வரவேண்டும்.
வானிலை சரியாக இருந்தால் வகுப்பறைக்கு வெளியே திறந்த வெளியை பாதுகாப்புடன் பயன்படுத்தலாம். பள்ளிகளில் நீச்சல் குளம் திறக்கக் கூடாது. மாணவர்கள் தொடும் இடங்கள் பயன்படுத்தும் இடங்களில் கிருமிநாசினி நாள்தோறும் தெளித்து சுத்தம் செய்து வைக்கவேண்டும். பணியாளர்கள் சுத்தமான முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகங்களை தொடுவது கூடாது தும்மல் இருமல் வந்தால் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய டிஷ்யூ பேப்பரால் துடைத்து குப்பையில் போட வேண்டும்
மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தந்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு சுழற்சி முறையில் பணிகளை மேம்படுத்த வேண்டும் பேனா பென்சில் ரப்பர் போன்ற கருவிகளை பயன்படுத்தும் போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளக் கூடாது ... எந்த காரணம் கொண்டும் வெளியாட்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.... போன்ற கட்டுப்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் உங்கள் பள்ளி மட்டும் பாதிக்கப்படாது தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டு கற்பித்தலும் கற்றலும் தடைபட்டு மாணவர்கள் வாழ்வு பாடுபடும் என்பதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
அரசின் விதிகளுக்கு உட்பட்டு அரசின் விதிகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் அரசுக்கு எந்தவித கெட்ட பேரும் ஏற்படாத வண்ணம் பெற்றோர்களுடன் இணைந்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் உயிர் பிரச்சனையில் மிகுந்த அக்கறையுடன் உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் காலத்தை கவனமுடன் கையாண்டு சிறப்பாக செயல்பட உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்.
அன்புடன் உங்கள்
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.