தன்னம்பிக்கையோடு காத்திருங்கள்....... நல்ல காலம் பிறக்கும்..........!
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் காரணமாகவும் நமது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எச்சரிக்கை மூலமும் நமக்கு வரவேண்டிய அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 40 சதவீத கல்வி கட்டண பாக்கி இன்று உங்கள் பள்ளிகளுக்கு கிடைத்திருக்கும். உங்கள் வங்கிக் கணக்குகளை சரி பாருங்கள்.
நான்கு சான்றுகளை பெற்று உடனடியாக அங்கீகாரம் கோரி விண்ணப்பியுங்கள் வரும் 20ம் தேதிக்குள் உங்களுக்குரிய தொடர் அங்கீகாரத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களே ஒரு பைசா கூட லஞ்சம் தராமல் நேரடியாக வந்து அங்கீகார ஆணை தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.
நமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சுய விவரங்களை
இ எம் ஐ எஸ் மூலம் திருடி மாணவர்களை சேர்க்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் எஸ். எஸ் .ஏ. பி ஆர். சி ஊழியர்கள் யார் எந்தத் தகவல் கேட்டாலும் யாரும் எந்த தகவலையும் தர வேண்டாம். பள்ளி திறந்து இருக்கிறதா விடுமுறையா எல்கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு பள்ளி மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு அங்கீகாரம் பெற்று விட்டீர்களா விண்ணப்பித்து விட்டீர்களா ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்கிற பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்பார்கள் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
எந்த தகவலும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
பள்ளி நிர்வாகிகளின் வலியும் வேதனையும் வந்தால் தான் தெரியும் எப்பொழுது பள்ளி திறக்கும் என்ற எண்ணமே இல்லாத இவர்களுக்கு நாம் ஏன் நமது மாணவர்களின் விவரங்களை தர வேண்டும் . பள்ளி திறக்கும் வரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் எந்த தகவலையும் தராமல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடருவோம் என்று நமது மாநில சங்கம் முடிவெடுத்து இருக்கிறது.
எனவே கவலைப்பட வேண்டாம் தன்னம்பிக்கையோடுகாத்திருங்கள் நல்ல காலம் பிறக்கும்......
பள்ளி வாகனங்களுக்கான பல்வேறு வரிகள் சம்பந்தமான வழக்கு 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது நிச்சயம் நல்லதொரு தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் வந்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.
அதேபோல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் லட்சக்கணக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான சொத்து வரி கட்ட வேண்டும் என்று எல்லோருக்கும் ஜப்தி நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது.
அந்த நோட்டீசை உடனடியாக மாநில தலைமைக்கு அனுப்பி வைத்து உங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டால் உச்ச நீதிமன்ற வழக்கில் உரிய பாதுகாப்பான தீர்ப்பாணை பெற்று சொத்து வரி கட்டாமல் உங்கள் பள்ளிகளை பாதுகாப்போம் உடனே மாநில தலைமையை தொடர்பு கொள்ளுங்கள் இது மிக அவசரம்......
என்றும் தனியார் பள்ளிகள் நலம் நாடும் உங்கள்
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.