ஆசிரியரின் பிரம்பென்னை அடிக்கவில்லை செதுக்கியிருக்கிறது..

ஆசிரியரின் பிரம்பென்னை அடிக்கவில்லை செதுக்கியிருக்கிறது..



உயிரெழுத்தும்


மெய்யெழுத்தும் உன்


தலையெழுத்தை நிர்ணயிக்குமென்று


கையெழுத்துப்போட்ட


முதல்வகுப்பு வாத்தியாரிடமிருந்து


ஆரம்பமானது அடிப்படைக்கல்வி..


 


உயரப்போகிறாய் நீ


உத்திரவாதம் தருகிறேன் நான்


உயர்த்திக்காட்டியதென்னை


உயர்நிலைப்பள்ளி..


 


மேலோர் உயர்ந்தோரென்று


மேலெழுந்த ஆர்வத்தில்


மேல்நிலைப்பள்ளியென்னை


மேன்மையாக்க...


 


கல்லூரிகளென்னை


கச்சிதமாய் கண்டெடுத்து


அறிவியலில் உயர்ந்தோனாக்கி


அழகு பார்த்தது..


 


திரும்பிப்பார்க்கிறேன்


ஆசிரியரின் பிரம்பென்னை


அடிக்கவில்லை செதுக்கியிருக்கிறது..


 


பேராசிரியரின் பேச்சென்னை


காயப்படுத்தவில்லை என்னை


கெளரவப்படுத்தியிருக்கிறது..


 


வாழ்வின் உச்சியிலென்னை


வசதியாய் ஏற்றி உட்கார வைத்த


ஏணிகளை எப்படி மறப்பேன்..!!


 


என் ஆசிரியப்பெருமக்கா


அடிபணிந்தே போற்றுவேன் உங்கள்


அர்ப்பணிப்பை..என்றும்


அடிமனதில் பொங்கும் அன்பே


அதன் காணிக்கை..!


#ஆசிரியர்தினவாழ்த்துகள்....