ஆா்.டி.இ. கல்விக்கட்டண பாக்கியை பெற்றுத்தர பாடுபடும் ஒரே சங்கம் நமது சங்கம் மட்டும் தான்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் R.T.E கல்வி கட்டண பாக்கி 2018 -19 40% மற்றும் 2019- 20 ஆம் கல்வி ஆண்டுக்கான 100% பணத்தை தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 2020 அன்று மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் உத்தரவிட்டார்.
அந்த வழக்கு இன்று மூன்றாம் தேதி விசாரணைக்கு வந்தது விசாரணையில் தேசிய பேரிடர் காலத்தில் அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் மேலும் 6 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. அன்னலட்சுமி வாதிட்டார்.
அதை ஏற்காத நீதியரசர் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கியை உடனே தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதை தருவதற்கு தாமதம் செய்தும் அங்கீகாரம் தருவதையும் தாமதம் செய்தும் தனியார் பள்ளிகளை நசுக்கும் மேலதிகாரிகள் .......
நமது மாநில சங்கம் வழக்குப் போட்டு விட்டோம் என்ற உடனே தனியார் பள்ளிகள் அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை மீறி விட்டார்கள் என்று தனது ஆட்சி அதிகாரத்தை அராஜகம் வழியாக பள்ளி நிர்வாகிகள் ஏதோ மாபெரும்குற்றம் செய்துவிட்டதாக மக்கள் மனதில் தோற்றுவிக்க நீதிமன்றம்சொன்ன 40% கட்டணத்தை தாண்டி 100% வசூலிப்பதாகவும் அதற்காக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களை திசைதிருப்பி பள்ளி நிர்வாகிகளை மிரட்ட பார்க்கிறார்கள். எனவே இனியும் நாம் பயந்து அடங்கி ஒடுங்கி கிடந்தால் நம்மை நசுக்கி நாசமாக்கி விடுவார்கள். அங்கீகாரம் தருவதைக் காட்டிலும் வேறு எந்த வேலையும் செய்யாத இவர்கள் நம்மை ஏளனம் பேசவும் மக்களை பொய்யர்களை சமூக விரோதிகளை நமக்கு எதிராக திருப்பி தங்கள் மீதுள்ள குற்றம் குறைகளை சரிக்கட்ட பார்க்கிறார்கள்.
இதை நாம் கடுமையாக எதுத்து நமது உரிமைகளை நிலைநாட்டி நமது பக்கம் உள்ள நியாயத்தை ஊடகவியலாளர்கள் மூலம் இந்த உலகத்திற்கு சொல்லுவோம் வாருங்கள்...
வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி திங்கட்கிழமை காலை பதினோரு மணிக்கு மானமுள்ள பள்ளி நிர்வாகிகள் அனைவரும் மறக்காமல் கூடுவோம். பள்ளிக்கல்வி ஆணையாளர் அலுவலகத்தில் நமது குறைகளை அதிகாரிகளின் குற்றங்களை நமது நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைப்போம். வெற்றி பெறுவோம். இனியும் பொறுப்பதில்லை எரிதழல் கொண்டு வா அதில் அறிவு தீபம் ஏற்றுவோம்
பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளுக்காகவும் வாழ்வை இழந்த நமது பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கும் உரத்த குரல் கொடுப்போம். உரிமைகளை மீட்டெடுப்போம் ..வாரீர் என்று வணங்கி வரவேற்கிறேன்.
என்றும் உங்கள்
கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.