EMIS இணையதளத்தில் நடைபெறும் திருட்டை எதிா்த்து மாபெரும் கண்ட ஆா்பாட்டம்
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
EMIS இணையதளத்தில் இருந்து நமது பள்ளி மாணவர்களின் தகவல்கள் தமிழக அளவில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
இது நமது உரிமையை மீறும் ஒரு செயல்.
நமது பள்ளிக்காக தனியாக USERNAME PASSWORD முதலியன தரப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,
நமது பள்ளிகளுக்கு தெரியாமல்
நமது பள்ளி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளாமல்
அரசுப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு அலுவலர்கள் உதவியோடு EMIS இணையதளம் வழியாக சேர்த்துக் கொள்வதை எதிர்த்து
இனி அந்த இணையதளத்தில் எந்த ஒரு தொடர் நடவடிக்கையையும் நமது நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து இயக்குனர் பெருமக்கள் உரிய பதில் அளித்தால் அதன் பிறகு எதைப் பற்றியும் யோசிப்போம்.
சங்கத்தில் இருந்து அடுத்த தகவல் வரும் வரை EMIS ல் எந்த ஒரு புதிய பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று சென்னையில் வருகின்ற 21 செப்டம்பர் 2020 அன்று
மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடைபெற உள்ளது
.
திரளாக வாருங்கள்
திறமையாக செயல்படுங்கள்
நமது ஒற்றுமையை பார்த்து தமிழ்நாடு அரசு நமக்கு தேவையானதை செய்த தரும் என்ற நம்பிக்கையோடு வாருங்கள்
நன்றியுடன் உங்கள்
நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.