தமிழக முதல்வாின் ஆசிாியா் தின வாழ்த்துச் செய்தி
முன்னாள் குடியரசு தலைவா் சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிாியா் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றோம்.
அரசு இந்த விழாவை ஒருநாள் மட்டும் கொண்டாடி விட்டுவிடும். ஆனால் நாம் மட்டும் நமது சங்கத்தின் சாா்பில் செப்டம்பா் மாதம் முழுவதும் மாவட்டம் தோறும் கொண்டாடி வந்தோம்.
நமது பள்ளிகளில் பணியாற்றும் எல்லா ஆசிாியா்களும் நல்லாசிாியா்களே என்கிற வகையில் அனைத்து ஆசிாியா்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் நல்லாசிாியா் விருதுகளை நல்விருந்தளித்து சிறப்பித்து வந்தோம்.
ஆனால் இந்த ஆண்டு நமது தனியாா் பள்ளி ஆசிாியா்களுக்கு சோகமான ஒரு ஆண்டாக தான் இருக்கின்றது.
ஆசிாியா்கள் மட்டுமல்ல தனியாா் பள்ளி நிா்வாகிகளே வாழ்வாதாரத்தை இழந்து 100நாள் வேலைக்கும் காய்கறி விற்பதற்கும், கருவாடு விற்பதற்கும் சென்றுக்கொண்டுள்ளனா். இந்த சோகம் இனியும் நமக்கு வேண்டாம்.
இதையெல்லாம் மாற்றுவதற்கு நமது சங்கம் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் நாம் ஓரளவிற்கேனும் உயிரோடு இருந்துக்கொண்டிருக்கிறோம்.
மற்ற லெட்டா் பேட் சங்கங்களைப் போல் நாமும் தூங்கிக்கொண்டிருந்தால் நம்மை முழுமையாக ஒழித்திருப்பாா்கள், உயிரோடு அழித்திருப்பாா்கள்.
எனவே நண்பா்களே ஒற்றுமையோடு இருப்போம்... இன்னும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் அழித்தொழிப்போம். கே.ஆா்,நந்தகுமாா் தலைமையிலான இந்த சங்கம் உங்களை பாதுகாக்கும்.
இதுதான் நமது சங்கத்தின் ஆசிாியா் தின செய்தி.
இதோ உங்களுக்காக தமிழக முதல்வாின் ஆசிாியா் தின வாழ்த்து செய்தி