நாளை முதல் பள்ளிகள் திறப்பு

நாளை முதல் பள்ளிகள் திறப்பு



மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில், நாளை ,(செப்.,21) பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசுகள், இதுகுறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளை திறக்க, அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், அசாமில், நாளை , பள்ளிகளை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அடுத்த, 15 நாட்களுக்கு, ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திராவில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு வெளியே இயங்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.