ஆா்.டி.இ. கல்விக் கட்டணம் 40% பணம் ஒரு வாரத்தில் கைக்கு வந்து விடும். இது நமது சங்கத்தின் தொடா் முயற்சிக்கு கிடைத்த வெற்றி....
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி......
நமது மாநில சங்கத்தின் சார்பில் வருகின்ற 21.09.2020ஆம் தேதி நடத்தவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து மாநிலம் முழுவதும் நமது சங்க நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியும் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை நாள்தோறும் கோரிக்கை மனுக்களை அனுப்பி பத்திரிகை ஊடகம் வாயிலாக செய்திகளை வரவழைத்து நீதிமன்றத்திலே வழக்கு போட்டு அதன் பலனாக அந்த தீர்ப்பை ஒட்டி அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத மாணவர்கள் சேர்த்திட்ட வகையில் நர்சரி பிரைமரி பள்ளி களுக்கு 40% கல்வி கட்டண பாக்கி 2018 .19 ஆம் ஆண்டுக்கான காசோலை ரூபாய் 48 கோடி பணம் பள்ளிக்கல்வி துறை மூலம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அவர்களுக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தது. அந்த காசோலையை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் திரு .கருப்புசாமி அவர்கள் மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களுக்கு ஒப்படைத்து விட்டார்கள்.
இனி மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திரும்ப நிதித்துறை இணை செயலாளர் அவர்களின் கையெழுத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள் .
அதை இணைச் செயலாளர் அவர்களியம் போனதும்
ஐ சி ஐ சி ஐ வங்கி கணக்கில் வரவு வைத்து ஓரிரு நாளில் அனைத்து பள்ளி நிர்வாகிகளின் கணக்கிலும் வரவு வைத்து விடுவார்கள்.. என்ற நல்ல செய்தியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
பிற கோரிக்கைகள் சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை காலை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் களுடன்பள்ளிக்கல்வி அமைச்சர் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வி ஆணையாளர் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி எல்லா கோரிக்கைகளும் வெற்றி பெற வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
சுவரொட்டிகள் அச்சடித்துஅப்படியே வைத்துள்ள நண்பர்கள் தயவு செய்து உடனடியாக உங்கள் ஊரிலுள்ள எல்லா சுவர்களிலும் ஒட்டி புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.
அதை காவல்துறை கணக்கெடுத்து புகைப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பி அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்.
21ஆம் தேதி கட்டாயம் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் உங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வந்து பள்ளிக்கல்வித் துறை ஆணையாளர் இயக்குனர் அமைச்சர் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக வழங்கி புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21ஆம் தேதி சென்னைக்கு வருவதை நீங்கள் இப்பொழுதே உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்காக டிக்கெட் ரிசர்வேஷன் செய்து கொள்ளுங்கள். கொரோனவை காரணம் காட்டி வராமல் இருந்துவிட வேண்டாம்.
நிகழ்ச்சி முடித்து ஒரு மணிக்கு அனைவருக்கும் ஹோட்டல் அசோகா எழும்பூரில் மதிய விருந்தும் நமது சங்கத்தின் மிக முக்கியமான மாநில செயற்குழு கூட்டம் 2 மணி முதல் 4 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர்கள் அத்தனை பேரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.
அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை விடு தூரமாக நின்று அன்பு பாராட்டி நமது ஒற்றுமையை பலப்படுத்த அனைவரும் தவறாது வாருங்கள் என்று அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.
என்றும் தனியார் பள்ளிகள் நலம் நாடும் உங்கள்
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.