கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய கால அவகாசம் அக்டோபா் 30 வரை விண்ணப்பிக்கலாம். நமது கோாிக்கைக்கு கிடைத்த வெற்றி....!
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வி அமைச்சர் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வி ஆணையாளர் இயக்குனர்கள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் நீதியரசர் அவர்களை நேரில் சந்தித்து கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரிலும் நமது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசின் கவனத்தை ஈர்த்ததாலும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் தந்து அரசு ஆணை வெளியிட்டுள்ளதை பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளேன்.பள்ளி நிர்வாகிகள் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் வைக்கிற கோரிக்கைக்கும் நமது சங்கம் அடுத்தடுத்து அரசுக்கு அழுத்தம் தந்து கோரிக்கைகளை வென்றெடுப்பதில் தொடர்ந்து பள்ளிகளை பாதுகாப்பதில் உயர்த்துவதில் உயர்ந்து நிற்போம் என்கிற உறுதிமொழியை உங்கள் அனைவருக்கும் இந்த மாநில சங்கத்தின் சார்பில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவணை கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருப்பவர்களை பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் வாங்கிய கடன் தொகை எந்த அரசு மற்றும் தனியார் வங்கியில் வாங்கினீர்கள் என்கிற விவரத்தை உங்கள் பள்ளி முகவரியோடு உடன் வாட்ஸ் அப்பில் அனுப்பினால் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு உரிய தடையாணை பெற்று வட்டித் தொகைக்கும் தவணைகாலத்திற்கும் விதி விலக்கு பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். உங்கள் பள்ளியின் அனைத்து ரகசியம் பாதுகாக்கப்படும் கவலைப்படாமல் இணைந்திருங்கள்.
நாம் தொட்டது துலங்கும் நினைத்தது நடக்கும் வெற்றி என்றும் நமக்கே என்பதே நமது சங்கத்தின் தாரக மந்திரம்.
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே. ஆர். நந்தகுமார்.