அரசையே அதிர வைக்கும் 25 கேள்விகள்......! பதில் தருமா தமிழக அரசு.....?
தகவல்அறியும் உரிமை சட்டம் 2005 ன் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கீழ்கண்ட தகவலை வழங்கிட வேண்டி மனு.....
அனுப்புதல்...,
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். க.எண்.6.
ஏகாம்பரம் தெரு. பம்மல். அஞ்சல் சென்னை. 75.
பெறுதல்...,.
உயர்திரு. இணை இயக்குனர் அவர்கள் (தகவல் உரிமைச்சட்ட பொறுப்பு அலுவலர்) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம்.
டி.பி.ஐ. வளாகம் கல்லூரி சாலை. சென்னை.6.
பொருள்..... ஐயா வணக்கம்..,..
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி கீழ்கண்ட தகவல்களை அளிக்க வேண்டி ரூபாய் 10 காண நீதிமன்ற வில்லை ஒட்டி...விண்ணப்பம் செய்துள்ளேன் அழிவு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்து தகவல்களையும் தவறாமல் தந்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
விடை தேடும் வினாக்கள்.......
1. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் அங்கீகாரம் பெற்று இயங்கும் நர்சரி பிரைமரி பள்ளிகள் எத்தனை?(மாவட்ட வாரியாக)
2. அங்கீகாரம் பெற விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளிகள் எத்தனை?(மாவட்ட வாரியாக)
3. அங்கீகாரம் பெறாமல் விண்ணப்பிக்காத நர்சரி பிரைமரி பள்ளிகள் எத்தனை (மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.)
4. தமிழகத்தில் மாவட்ட வாரியாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் துவக்க அங்கீகாரம் தொடர் அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகள் எண்ணிக்கை எவ்வளவு.?
.5. மேற்கண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் +மாணவிகள் எண்ணிக்கை எவ்வளவு ?
6. ஆசிரியர்கள் எண்ணிக்கை எவ்வளவு ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
7. இந்த கல்வியாண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அரசு பள்ளியில் சேர்ந்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
(மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.)ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரையும் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு என்று மாவட்ட வாரியாக வகுப்பு வாரியாக தரவேண்டும்.
8.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் சேர்ந்த மொத்த மாணவர்கள் எத்தனை பேர்? மாற்றுச்சான்றிதழோடு வந்தவர்கள் எத்தனை பேர்?.
9.மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வந்தவர்கள் எத்தனை பேர் அதில் தனியார் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேர் என்று மாவட்ட வாரியாக தனித்தனியாக தரவேண்டும்.
10. ஆர்.டி.இ. தொடங்கி இதுநாள் வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
11.ஆர்.டி.இ.சட்டப்படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் சென்ற ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு தொடர்ந்து படிக்க அனுமதி வழங்கப்படுமா?.
12. அரசு தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளிகள் ஆக தரம் உயர்த்துவது போல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு ஆனை உண்டா? இருந்தால் தரவும்.
13 . அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி உண்டா? எந்த வகுப்பிலிருந்து எந்த வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் உண்டா? தனி வகுப்பறைகள் உண்டா? இல்லை என்றால் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துகிறார்கள்? ஆசிரியர்கள் ஆங்கில வழிக் கல்விக்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா? அவர்கள் நிரந்தர ஆசிரியர்களா? தற்காலிக ஆசிரியர்களா?ஆங்கில வழிக் கல்விக்காக மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் அரசு பள்ளிகளில் எவ்வளவு வசுலிக்கிறீர்கள்?அவர் வசூலிக்க அரசாணை ஏதேனும் உள்ளதா இருந்தால் வழங்கவும்?.
14 .அரசு பள்ளிகள் எண்ணிக்கை எவ்வளவு?
15. அரசு பள்ளிகளில் மொத்தம் எவ்வளவு கழிப்பறைகள் உள்ளன குடிநீர் வசதி உள்ளதா மாணவர்கள் அனைவருக்கும் அமரும் வகையிலான சாய்வு பெஞ்சுகள் மேசை நாற்காலிகள் உள்ளதா.?
15. அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளை போல் சுகாதாரச் சான்று தீயணைப்பு துறை தடையின்மைச் சான்று கட்டிட உறுதி சான்று கட்டிட உரிமை சான்று பள்ளி கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெற்றுள்ளார்களா? அரசு பள்ளிகளும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தொடர் தற்காலிக அங்கீகாரம் தரப்படுகிறதா?
16. அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கு தொழில் வரி
நிலவரி குடிநீர்வரி செலுத்தப்பட்டதா? அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
17. அரசு பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு 11 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் எத்தனை சதவீதம்?
தனியார் பள்ளியில் படித்த மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்றார்கள் என்று தனித்தனியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி முடிவை அறிவிக்க வேண்டும்.
18. தமிழகத்திலுள்ள மத்திய மாநில அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
19.2014 முதல் 2020 செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் எத்தனை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையால் தடையின்மைச் சான்று வழங்கப்பட்டது?
20. தமிழகத்தில் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை எவ்வளவு?
21. தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் எத்தனை பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. (மாவட்ட வாரியாக)
22. தமிழகத்தில் எத்தனை தனியார் பள்ளிகளில் பாரத சாரண சாரணியர் இயக்கம் நடைபெறுகிறது அதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை எவ்வளவு?
23. தமிழகத்தில் எத்தனை தனியார் பள்ளிகளில் ஜே ஆர் சி என்சிசி என் எஸ் எஸ் அமைப்புகள் உள்ளது அதற்காக அரசு செலவிடும் தொகை எவ்வளவு? மாவட்ட வாரியாக முழு விவரம் அளிக்கப்படவேண்டும்.
24. எத்தனை தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளது (மாவட்ட வாரியாக முழு விவரம் தெரிவிக்கவும்).
25. தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்காக 2019.20 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிடம் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? அதில் ஏதாவது தனியார்
பள்ளிகளுக்காக செலவு செய்தீர்களா? தனியார் பள்ளிகள் கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக சேர வேண்டும் என்று ஏதாவது அரசாணை உள்ளதா இருந்தால் வழங்க வேண்டும்.
மேற்கண்ட 25 கேள்விகளுக்கு பொது தகவல் அதிகாரி அவர்கள் தயவுசெய்து உரிய காலத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம்.
இந்த ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நகல் மற்றும் பிரதி எடுப்பதற்கு ஏதாவது கட்டணம் கட்ட வேண்டுமென்றால் கட்ட தயாராக இருக்கிறேன் எவ்வளவு என்று தெரிவித்தால் உடனே கட்டி உரிய தகவல்களை பெற்று தனியார் பள்ளிகளின் உரிமைகளை நிலைநாட்ட உயர்நீதிமன்ற வழக்குகளுக்கான விவரங்கள் தேவைப்படுவதால் மேற்கண்ட அனைத்து விவரங்களையும் காலம் தாழ்த்தாது உடனே வழங்கிட வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.
தங்கள் உண்மையுள்ள
கே ஆர் நந்தகுமார்