அரசு பள்ளிகளில் சுமார் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் .......! தனியாா் பள்ளிகளில்...?

அரசு பள்ளிகளில் சுமார் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் .......! தனியாா் பள்ளிகளில்...?


கொரோனா காரணமாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி முதல் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது. சேர்க்கை தொடங்கிய முதல் 2 நாட்களிலேயே சுமார் 2½ லட்சத்துக்கும் மேல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாகவும் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் சுமார் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் 1-ம் வகுப்பில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மாணவர் சேர்க்கை பள்ளிகளில் இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 ஒன்றாம் வகுப்பில்  சுமார் 2,.75லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில்   சேர்ந்து உள்ளதாக கூருகிறீர்கள் மீதம் மாணவர்கள் எங்கே? 
ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பில் சுமார் 9லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அப்படி பார்த்தால் ஒன்றாம் வகுப்பில் 9லட்சம் மாணவர்கள் சேரவேண்டும். ஆனால்  சேர்ந்து இருப்பதாக கூறப்படும் எண்ணிக்கை 2.75 லட்சம். மீதம் 6.25 லட்சம் மாணவர்கல் சேர வேண்டி உள்ளது


எனவே கண்டிப்பாக தனியார் பள்ளிகள்,  திறக்க படும் பொழுது மாணவர் சேர்க்கை  வழக்கம்போல் இருக்கும்   (5முதல் 10% சத சேர்க்கை குறையலாம்) எனவே நாமே நம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை இல்லை என்று   கூறி கொள்ள வேண்டாம். இப்படி கூறுவதால்  சேர்க்கை இன்னும்  குறைய வாய்ப்புகள் அதிகம்.ை.


இது எல்லாமே ஒரு மாயத் தோற்றம். அரசும் அரசுப்பள்ளி ஆசிாியா்களும் சோ்ந்து பின்னியிருக்கும் சதி வலை.


அரசியல் கட்சிகள் எப்படி ஐ,டி,விங்க் வைத்துக்கொண்டு ஓட்டுக்காக பொய்யான தகவல்களை பரப்புகின்றதோ அதேப்போன்று அரசும் அரசுப்பள்ளி ஆசிாியா்களும் செய்து வருகின்றனா். 


மக்கள் விரைவில் இதற்கு தக்க பதிலடி தருவாா்கள்.