தொடா் அங்கீகாரத்திற்கு ரூ. 10,000 லஞ்சம் கேட்கும் விருதாச்சலம் வட்டார கல்வி அலுவலரை வன்மையாக கண்டிக்கிறாம்.....
நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் பி.இ.ஓ. அவர்கள் ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் தான் தொடர்அங்கீகார கோப்புகளை வாங்குவேன் இல்லையென்றால் வாங்க மாட்டேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்றும் பள்ளி நிர்வாகிகளை மிரட்டுகிறார். விருதாச்சலம் வட்டார கல்வி அலுவலர் உடனடியாக பள்ளி நிர்வாகிகளின் தொடர்அங்கீகார கோப்புகளை பெற்று நான்கு சான்றிதழ் இருந்தால் பழைய பள்ளிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இனியும் காலதாமதம் செய்தால் கோப்புகளை வாங்க மறுத்தாள் அங்கீகாரம் தர மறுத்தால்... கட்டாயமாக தஞ்சமாக பணம் வாங்கினால் நிச்சயம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்து தங்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும்.
காவல் துறையில் புகார் தருவோம் சுவரொட்டிகள் ஒட்டி ஊரெல்லாம் லஞ்சம் வாங்கும் பி.இ.ஒ. மீது நடவடிக்கை எடு கைது செய் என்று போஸ்டர் ஒட்ட தயாராகுவோம். உயரதிகாரிகளுக்கு தகவல் தருவோம் இது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தினுடைய கடைசி எச்சரிக்கை .
இது விருத்தாச்சலத்தில் தொடங்கி வேறு எந்த மாவட்டத்தில் எந்த அதிகாரிகள் எந்தத் துறையில் செய்தாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது.... என்று முடிவெடுத்திருக்
கிறோம்.
இன்று முதல் எச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தபதிவை இருக்கின்றோம்.
உடனடியாக உங்கள் லஞ்சப் போக்கை நிறுத்திக் கொள்ளுங்கள் .
இந்தக் கொடிய கொரோனா தொற்றுநோய் காலத்தில் கூட இந்த லஞ்ச அதிகாரிகள் திருந்தவில்லை என்றால் இவர்களை கடவுளாலும் மன்னிக்கமாட்டார்.
லஞ்ச அதிகாரிகளுக்கு மக்கள் மன்றம் மற்றும் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தருவோம்.
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்