நல்லாசிரிய பெருமக்களுக்கு ......! நலம் வாழ வாழ்த்துக்கள்......!!

நல்லாசிரிய பெருமக்களுக்கு ......! நலம் வாழ வாழ்த்துக்கள்......!!



இன்று ஆசிரியர் தினம் பள்ளிகள் இல்லை வகுப்பறை இல்லாத கல்வித்திட்டம் ஆசிரியர்களின் வீடுகளே வகுப்பறைகளாக கைப்பேசிகள் எல்லாம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேருதவியாக படித்ததை மறந்து விடாமலிருக்க படிப்பதை உறுதி செய்திட நாளும் கற்று கற்பித்து வரும் நல்லாசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இந்தியத் திருநாட்டில் உண்மையாக உழைக்கும் நல்லாசிரியர் பெருமக்களுக்கு விருதுகள் கொடுக்காவிட்டாலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வளமான திட்டங்களும் சட்டங்களும் வேண்டும்.


அறிவொளி தீபம் ஏற்றும் தனியார் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் இந்தக் கொடிய கொரோனா தொற்றுநோய் காலத்தில் வறுமையில் வாடி வதங்கி வாழ்விழந்து போவதற்கு இந்த அரசும் ஒரு காரணம்.


குருவுக்கு வந்தனம் செய்யவில்லை என்றாலும் நிந்திக்க வேண்டாம். 
இந்த நாளிலாவது இனிவரும் நாட்களிலாவது ஆசிரியர்கள் அனைவரையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். 


தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு
இந்த இக்கட்டான சூழலில் அரசின் பங்கு அவசியம் இருக்க வேண்டும்.


ஒவ்வொரு ஆசிரியரும்
 ஒரு நூலகம். ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும் தனித்துவமும் கிடைக்கும். 


அரியவற்று யெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் என்ற வள்ளுவப் பெருந்தகையின் 
வைர வரிகளுக்கு ஏற்ப ஒருவர் அடையும் பேறு தம்மை விட மூத்த அறிவுடைய ஞான குருவை போற்றி சுற்றமாக கொளல் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். 


கல்வி கற்ற காலம் முதல் வாழ்வின் எல்லா காலங்களிலும் அறிவால் உயர்ந்து 
நல்வழி நடத்தும் ஆசிரியர்கள்தான் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள்.. என்பதை மறவாமல்.... 


அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் ஒன்றுமில்லை என்பதை உறுதிப்பட சொல்லித் தந்த ஆசிரியர் பெருமக்களுக்கு என்னாளும் ஒளிரும் ஒளி விளக்குகளுக்கு கலங்கரை விளக்காய் கடைசி மூச்சு உள்ளவரை அறிவொளி தீபமேற்றும் அற்புதங்கள் தான் ஆசிரியர் பெருமக்கள்..,


பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பாடம் நடத்தும் அனைவரும்  தனியார் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பணியாற்றும் குருமார்கள் அனைவருக்கும் மத்திய மாநில அரசுகள் ஆசிரியர்களின் அறிவு தீபம் வற்றாமல் பற்றிப் படர்ந்திட என்றும் போற்றிப் பாதுகாக்கும் வண்ணம் அவர்கள் வறுமையில் வாடாமல் வளமாக வாழ்ந்திட மாதம் தவறாமல் வாழ்வாதாரநிதியை வழங்கி ஒரு வேலை கூட பசி இல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். 


அதுதான் உண்மையான மனித வள மேம்பாடு அதுவே நமது சங்கத்தின் கனவு அதை நிறைவேற்றும் வரை நாம் தொடர்ந்து ஆசிரிய பெருமக்களின்
 வாழ்வு உயர்ந்து ஒளி வீசிட உழைத்துக் கொண்டே இருப்போம்.


விருதுகள் பெறுபவர்கள்மட்டும் நல்லாசிரியர்கள் அல்ல.
நாளும் உழைப்பவர்களும் கற்ப்பவர்களும் கற்பிப்பவர்களும் நல்லாசிரிய பெருமக்களே...,


அப்படிப்பட்ட நல்லாசிரிய
பெருமக்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குவோம்.


வாழ்க ஆசிரிய பெருமக்கள் 
வளர்க அவர்கள் அறிவுச் செல்வமும் பொருட் செல்வமும் பெற்று 
நற்பேரும் புகழும் பெற்று பெருவாழ்வு வாழ உளமார வாழ்த்துகின்றேன். 


என்றும் ஆசிரியர் பெரு மக்களின் வாழ்வு உயர பாடுபடுவோம் 


உங்கள்


கே .ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.