மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை

மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை





நாடு முழுக்க புதிய தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வர உள்ளது. ஆனால், பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கல்விக் கொள்கை குறித்து விளக்கமளித்தார்.





வழக்கம் போலவே நேரலை வழியாக அவர் இன்று ஆற்றிய உரையின்போது,

“இந்தியாவின் கல்விமுறையை நவீனப்படுத்துவதற்காக புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம், பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் விருப்பதிற்கேற்றபடி கொண்டுவரப்பட்ட இந்த கல்விக்கொள்கை மூலம் கல்வியில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம், மாணவர்கள் எதைக் கறக் வேண்டுமோ அதைக் கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த கல்விக்கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநில மாணவர்கள் அவரவர் தாய்மொழி மூலம் கல்வி கற்று அவ்வழியில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுதான் இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம்.



 

இந்தக் கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.