தனியாா் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளிகள்
தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகள் மிக வேகமாக பிரச்சாரத்தில் இறங்கி பெற்றோர்களை பலமொழிக்கல்வி தந்து பல்வேறு சலுகைகளுடன் மாணவர்களை ஈர்த்து வருகிறார்கள்.
அரசுப்பள்ளிகளில் படித்தால் மட்டுமே இனி அரசு வேலை என்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 10% இட ஒதுக்கீடு என்ற பிரச்சாரத்தை முன்வைத்து நேற்றைக்கு மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 6000 புதிய மாணவர்களை சேர்த்துள்ளார்கள் என்று சொன்னால் தமிழ்நாடு முழுக்க எவ்வளவு மாணவர்களை புதிதாக சேர்த்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்
தனியார் பள்ளிகளை குறிவைத்து சலுகைகளை வாரி வழங்கி இந்தக் கொரோனா கொடிய நோய் தொற்று காலத்தில் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் திண்டாடி வரும் இவ்வேளையில் மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டு தனியார் பள்ளிகளில் இருந்து மடைமாற்றம் செய்யப்பட்டு திசை திருப்பி அரசுப் பள்ளிகளுக்கு எந்தவித மாற்றுச்சான்றும் இல்லாமல் ஆதார் கார்டு மட்டும் வைத்துக்கொண்டு மாணவர்கள் சேர்க்கையை செய்து வருகிறார்கள்.
இப்படியே போனால் தனியார் பள்ளிகளின் நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். இப்போதேனும் நாம் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவில்லை என்றால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது இனி காலம் தான் பதில் சொல்லும் கவலையுடன் தனியார் பள்ளிகளின் நலம் நாடும்
உங்கள்
கே.ஆா். நந்தகுமார்.