இரண்டு ஆண்டுகள் அங்கீகாரம் ஆணை

இரண்டு ஆண்டுகள் அங்கீகாரம் ஆணை


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு ஓராண்டு மட்டுமே தந்த தொடர் அங்கீகாரம் தற்போது 31. 05 .2022 வரை இரண்டு ஆண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க அரசாணை வெளியிட்டு இருக்கிறார்கள். இது டி.டி.சி.பி சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளுக்கு மட்டும். 


கட்டிட அனுமதி பெற்ற பள்ளிகளுக்கு 3 ஆண்டு தொடர் அங்கீகாரம் வழங்கப்படும். நமது சங்கத்தின் தொடர் சாதனைகளில் இதுவும் மிக முக்கியமானது. 


நாளை காலை சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் F.C. சம்பந்தமான மிக முக்கியமான தீர்ப்பு வழங்கவுள்ளது.
 தீர்ப்பு வந்தவுடன் தீர்ப்பின் நகலை உங்களுக்கு அனுப்புகிறேன். 


அதற்கடுத்து நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்கும் வழக்கை தாக்கல் செய்யு உள்ளோம். பதிவு செய்யாத பள்ளிகள் உங்கள் பள்ளியின் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.


 என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள் 
கேஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.



Page 2



Page 3