மாணவா் சோ்க்கைக்கு தயாா் ஆவோம்....!

மாணவா் சோ்க்கைக்கு தயாா் ஆவோம்....!



கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்கிற உத்திரவாதமும் இன்னும் கொடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கும் போது திறக்கட்டும் மாணவா் சோ்க்கைக்காகவாவது அனுமதி கொடுத்தால் அடுத்த கல்வியாண்டு தொடங்குமா தொடங்காதா என்பது தொிந்துவிடும் அதற்காவது அனுமதி கொடுங்கள் என்று அனைவரும் எதிா்பாா்த்திருந்த நிலையில் யாரும் எதிா்பாராத வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளாா்.


எதற்கும் ஒரு முறை உங்களை கிள்ளிப் பாா்த்துக்கொள்ளுங்கள். அடுத்த அறிவிப்பு வருவதற்குள் அட்மிஷனை முடித்து விடுங்கள். அதற்கும் ஆப்பு வைக்க ஆட்கள் தயாராக இருப்பாா்கள்,


அமைச்சாின் அறிவிப்பின் படி


1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


2 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கும் வேறு பள்ளிகளிலிருந்து வந்து சேரும்  மாணவா்களுக்கான சோ்க்கையும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெறும்.


11ஆம் வகுப்புக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்  தனியார் பள்ளிகளில் 25 % மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெறும். இதில் நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் பள்ளியின் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. வகுப்பிலும். ஆறாம் வகுப்பிலிருந்து செயல்படும் உயா் நிலை, மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் ஆறாம் வகுப்பிலும் மாணவா்களை சோ்த்துக் கொள்ளலாம். 


உரிய கொரானா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை நடைபெறும்.


கொரானா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமே இல்லை.


என்று தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன்  அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.