கல்விக் கட்டணம் கேட்டு நிர்பந்திக்கும் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறிய பள்ளிகள் குறித்த விவரங்களை வரும் 17ம் தேதி வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் விதிமீறிய தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எந்தெந்த பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை எதிர்வரும் 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.