பள்ளி மாணவா்கள் பங்கேற்காத கலையிழந்த சுதந்திர தின விழா
உலகம் மொத்தமும் கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த காலகட்டத்தில் தன் 74ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது இந்தியா. இதை கவனிக்கும்போதே நம்மால் புரிந்து கொள்ள முடியும், இந்த விழா இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை.
300 ஆண்டுகளாக இந்தியாவின் எல்லா நகர்வுகளையும் கட்டுக்குள் வைத்திருந்த இங்கிலாந்து நிறுவனம், தன் மூட்டை முடிச்சுகளோடு அவர்களது தாயகம் திரும்பியதையடுத்து, இந்தியா தனியுரிமை கொண்ட சுதந்திர நாடாக மாறியது.
அவ்வளவு எளிமையாக வெறும் மூன்று வரிகளில் எழுதிவிட முடிகிறது. ஆனால், உண்மையில் அது அவ்வளாவு எளிதாக நடந்து விடவில்லை. இந்தியர்களின் அப்போதைய ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தண்டனைதான் அந்த 200 ஆண்டுகால அடிமைத்தனம். இப்படி இருந்த ஒரு நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம், ஏதோ மந்திரத்தால் விளைந்த மாங்காய் இல்லை. கோடிக்கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்து பெற்ற பெரும்பொக்கிஷம் அது.
மீண்டும் ஒருமுறை இதே தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் மீண்டும் தேசத்தின் ஒற்றுமை, சிறப்பு, தனித்துவங்கள் ஆகியவற்றை நம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் உணர்த்தும் வகையில்தான் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வந்தது.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது பள்ளிகளில் கொடியேற்றுவதன் நோக்கம் குழந்தைகள் மத்தியில் நாட்டுப்பற்றுக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுப்பதே. குழந்தைகளையே அழைக்க வேண்டாம் என்ற பிறகு வெறுமனே கொடியேற்றுவதில் என்ன பலன்?
இது குறித்துக் கேட்டப்போது “குறைந்தபட்சம் ஆன்லைன் வழியாக போட்டிகள், சந்திப்புகள் என குழந்தைகளின் பங்கேற்பை உறுதி செய்திருக்கலாம். இதனால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற கேள்வி இப்போது எழலாம். ஒரு ஓட்டால் என்ன மாறிவிடப்போகிறது என்ற கேள்விக்கு என்ன பதிலோ அதேதான் இதற்கும் பதில்.
பள்ளிக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்படும் பதிவுகள்தான் அவர்களது பிற்கால வாழ்வின் பிரதிபலிப்புகள். பங்கேற்கும் மாணவர்கள் மட்டுமன்றி பார்வையாளராக இருக்கும் மாணவர்கள் மனதிலும் அந்தப் பதிவுகள் தாக்கம் நிகழ்த்தக் கூடியவை. ஆனால், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இந்த அடிப்படையை மனதில் வைத்துத்தான் சுற்றறிக்கை வெளியாகியிருக்க வேண்டும்”.
மொத்தத்தில் ஆசிரியர்கள் மட்டும் போய் கொடியேற்றுங்கள் என்னும் உத்தரவு, எந்த விதத்திலும் உபயோகமானது அல்ல. வெறுமனே கொடியேற்றம் என்னும் சடங்கு நிகழ்த்தப்பட்டு விட்டது என்ற பதிவை மட்டும் அரசாங்க ஏட்டுக்கு அனுப்பி வைக்கும்.
என்னதான் கோட்டை கொத்தளத்தில் முப்படை வீரர்களின் மாியாதையை ஏற்றுக்கொண்டு மாண்புமிகு பாரத பிரதமரும். மாண்புமிகு மாநில முதல்வா்களும் மூவா்ணக் கொடியை ஏற்றினாலும் இந்தியாவின் எங்கே ஒரு மூளையில் ஒரு ஏழைத்தாயின் சின்னஞ்சிறு குழந்தை தனது பெற்றோா்கள் உழைத்து சம்பாதித்துக் கொடுத்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று கடையில் ஒரு தேசியக்கொடியை வாங்கி சட்டையில் குத்திக்கொண்டு வந்தேமாதரம் என்று முழங்கும்ஒற்றை ஓசை இந்திய இராணுவத்தினா் இசைக்கும் பேண்டு வாத்தியங்களை தாண்டி ஒலிக்கும் ஆனந்தத்தின் முழக்கமாக இருக்கும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீா்களே முதல்வா்களே என்று மக்கள் கேட்க தொடங்கிவிட்டனா்.
கொரோனா வந்து மக்களை. பள்ளி மாணவா்களை வீட்டுச் சிறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தாலும் அவா்களின் சுதந்திர வேட்கையை யாராலும் அடைக்க முடியாது. இந்த சுதந்திர தினம் கொரோனாவில் இருந்து. கெரோனாவை காரணம் காட்டி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடமிருந்து. ஆட்சியாளா்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று எதிா்பாா்த்திருந்தனா். தேசிய கொடி பிடிக்கவே கூடாது என்று சொல்லி விட்டாா்கள்.
அடுத்த குடியரசு தினத்திற்காவது இந்த வாய்ப்பை தாருங்கள்.....?