குழந்தைகளை கவரும் புதிய கல்விக் கொள்கை
இனி குழந்தைகள் ஸ்கூலுக்கு போக அழ மாட்டார்கள். புதிய கல்வித் திட்டத்தின்படி எட்டு வயசு வரை குழந்தைகளுக்கு ஜாலியான படிப்பு. அறிவியல், புவியியல் என்று பாடங்களாக இல்லாமல், எழுதப் படிக்க மற்றும் கூட்டல் கழித்தல், பெருக்கல் என்ற அடிப்படை கணிதம் மட்டும் தான். அதுவும் எல்லாமே விளையாட்டுடன் கலந்து தான்.
ஆம்! மூன்று வயது முதல் எட்டு வயது வரை ஒரு கட்டம். இதில் மிகவும் முக்கியமான விசயமாக அரசாங்கம் கவனம் செலுத்த இருப்பது, குழந்தைகளுக்கான போஷாக்கான உணவு.
நம் நாட்டில் கிராமத்துக் குழந்தைகள், குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு போதுமான போஷாக்கு உணவு கிடைக்காததால், அவர்களின் அறிவு வளர்ச்சி சற்றே பின் தங்கியிருக்கிறது. ஆகவே, ECCE - (Early Childhood Care and Education) என்றத் திட்டப்படி அரசாங்கப் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் ஆரோக்கிய உணவு வழங்கப்படும். இதன் மூலம் எல்லா குழந்தைகளுக்கும் ஆரோக்கிய உணவும், அதன் மூலம் உற்சாகமான மனநிலையையும் கொடுக்க முடியும். சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாவட்டங்களில் இத்திட்டம் கூடுதல் கவனம் கொடுத்து செயல்படவிருக்கிறது.
8 வயது வரையிலான கல்வியானது, உள்ளூர், ஆறு, குளம்,மலைகள், சிறப்பான தலங்கள், உள்ளூர் கலைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து அது தொடர்பான அறிவு மற்றும் திறன்களைக் கற்பிக்கும் திட்டம் இருக்கிறது. (இப்படியொரு திட்டத்தால், தமிழர்களின் பாரம்பரியப் பெருமை, தமிழகக் கலைகள் எல்லாம் வளரும் தானே? அப்ப தமிழர்களாகிய நாம் சந்தோசம் தானே படணும்? ஏன் கொதிக்கிறோம்?
சிறப்பான செய்தி என்னவெனில், இந்த ஆரம்பகால கல்விக் காலத்தை கல்வி அமைச்சகம் மட்டும் பராமரிக்கப் போவதில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை(MHRD), பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD), நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் துறை(WHF) மற்றும் பழங்குடியினர் அலுவல் துறை ஆகிய அனைத்துத் துறைகளும் இணைந்தே இந்த ECCE என்ற ஆரம்பகால குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றனர்.
அதாவது, இனி ஏழைக் குழந்தைகளுக்கும் பன்னாட்டுத் தரத்துடனான சிறப்பான கல்வி கிடைக்கப் போகிறது என்பது உறுதியாகிறது. சமூக அக்கறையுள்ள யாராவது இதற்கு முட்டுக்கட்டையாக நிற்பார்களா? அப்படி நின்றால் அவா்களை மக்கள் சும்மாவே விட மாட்டாா்கள்.
ஏன் என்று சொன்னால் இனி நாட்டில் மக்களையும். தாய்மாா்களையும். குழந்தைகளையும் ஏமாற்றும் அங்கன்வாடிகள் இருக்காது. இவை மட்டுமல்ல அரசு துவக்கப்பள்ளியும் சும்மா சத்தில்லாமல் சோறு போடும் இடமாக மட்டுமல்லாமல் குழந்தைகளின் அறிவுக்கு தீனி போடும் இடமாகவும் மாறப்போகின்றது.
பின்லாந்து கல்வியே நமது நாட்டு கல்விக்கு பின்னால் போகும் அளவிற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது. எனவே இனி யாராவது புதிய கல்விக்கொள்கை சாியில்லை என்று சொன்னால் அவா்களை ஓட ஓட விரட்டுங்கள்.