T C இல்லாமல் மாணவா்கள் சோ்ப்பதை தடுக்க வேண்டும் அரசுக்கு பொதுச்செயலாளா் கோாிக்கை....
அனுப்புதல் ....
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் .
எண்.6 ஏகாம்பரம் தெரு.
பம்மல்.. சென்னை 75 கைபேசி எண்
9443964053
இமெயில் ஐடி. matriculation news 2011@gmail.com
பெறுதல்...
உயர்திரு. முதன்மைச் செயலாளர் அவர்கள். பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சென்னை-9.
பொருள்.... மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்கை செய்வதை கைவிட வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்காமலேயே இ. எம். ஐ. எஸ். எண்ணை கொண்டு காமன் பூல் வழியாக நேரடியாக மாணவர்களின் முழு தகவலையும் எடுத்துக்கொண்டு தனியார் பள்ளிகளுக்கு எந்த தகவலும் தராமல் நிலுவை பாக்கியையும் செலுத்தாமல் லட்சக்கணக்கான மாணவர்களை அரசுப் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு செல்லும் முயற்சியை கைவிட்டு தனியார் பள்ளிகளையும் பாதுகாத்திட வேண்டி கோரிக்கை விண்ணப்பம்.
ஐயா..,, வணக்கம். நேற்று 17ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்தக் கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எப்பொழுது பள்ளி திறக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் புதிய மாணவர்கள் சேர்க்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை துவங்கி தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இணையதளம் வழியாக மாணவர்களின் முழு விபரங்களையும் இ. எம். ஐ. எஸ். மூலம் தகவல்களை சேமித்து தனியார் பள்ளி நிர்வாகங்களின் அனுமதி இல்லாமலேயே மாற்றுச்சான்றிதழ் பெறாமலேயே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பி.ஆர்.சி. ஆசிரியர்களின் துணையோடு தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டண பாக்கியை நிலுவையில் வைத்துவிட்டு தற்போது அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை செய்து வருகிறார்கள்.
இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த கலக்கத்தோடு வரவேண்டிய கல்விக்கட்டணபாக்கி வராமலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு மாதச் சம்பளம் தர முடியாமலும் அடுத்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து தொடர்ந்து பள்ளியை நடத்த முடியுமா முடியாதா என்கிற ஏக்கத்தோடு திசை தெரியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
எனவே அய்யா அவர்கள் அருள்கூர்ந்து மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் பள்ளி நிர்வாகங்கள் தந்து அதனடிப்படையில் அரசு பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களை சேர்த்தால் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வரவேண்டிய பழைய கல்வி கட்டண பாக்கியவது பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் வழியில்லாமல் பி. ஆர். சி. யின் துணையோடு இ. எம். ஐ. எஸ். நம்பர் வைத்து காமன் பூல் வழியாக ஆப்ஸன்ட் காட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை சேர்த்து வருவதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
இப்படி ஒரு பயங்கரமான தாக்குதலை தனியார் பள்ளிகள் மீது தொடுத்தால் தனியார் பள்ளிகளை அரசு எதிர்த்து என்ன செய்ய முடியும். எனவே அருள்கூர்ந்து இந்த பிரச்சனையில் தலையிட்டு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி தனியார் பள்ளிகளும் வாழ நல் வழிகாட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.
அருள்கூர்ந்து எவ்வகை பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்று மாணவர்களை சேர்க்கும் நடைமுறையை கடைபிடிக்க உரிய அரசாணையை வெளியிட வேண்டுமாய் பணிவோடு வேண்டுகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்
சென்னை 75 .
18. 08. 2020.
தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பணிந்து சமர்ப்பிக்கின்றோம்.
உயர்திரு. பள்ளிக்கல்வித் துறை ஆணையாளர் அவர்கள்.
உயர்திரு. பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அவர்கள்.
உயர்திரு. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்.
உயர்திரு. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அவர்கள் கல்லூரி சாலை சென்னை. 6.