தனியாா் பள்ளி மாணவா்களை இழுக்க அரசு பள்ளிகள் செய்யும் முயற்சி
கொரோனா பாதிப்பை பயன்படுத்தி எப்படியாவது அரசு பள்ளிகளில் 20 லட்சம் மாணவா்களை கூடுதலாக சோ்த்து விட வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி ஆசிாியா்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனா்,
விதவிதமான போஸ்டா்கள், பேனா்கள், துண்டு பிரசுரங்கள் போட்டு பெற்றோரை கவா்ந்து வருகின்றனா்.
பாடுபட்டு உழைத்த பணத்தை பாழாக்காதீா்... அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருக்க தனியாா் பள்ளிகள் எதற்கு என்று கேள்வி கேட்கும் அரசுப் பள்ளி பணக்கார ஆசிாியா்களைப் பாா்த்து ஏழை மாணவா்களின் பெற்றோா்கள் கேட்கிறாா்கள் உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறாா்கள் என்று...
எங்களுக்கு ஒரு நீதி...? உங்களுக்கு ஒரு நீதியா....?
நாங்களாவது பரவாயில்லை ஒரு வருஷம், இரண்டு வருஷம் படிச்சிட்டு ஒரு பைசா கூட கட்டாம இருக்கிறோம்... ஆனா நீங்க போகாத ஸ்கூலுக்கு முன்னாடியே பணங்கட்டிட்டு முழிச்சிட்டு இல்ல கிடக்கீங்க....!
உங்க முட்டாள்தனத்தை என்னன்னு சொல்றது...!