மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் உலகத் தரமான கல்வியை உறுதி செய்கிறது. பாரதிய ஜனதா கட்சி (கல்வியாளா் பிாிவு) மாநில செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வரவேற்பு அறிக்கை....
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இனி நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் அனைவருக்கும் கிடைக்கும் .அதுவும் உலகத்தரம் வாய்ந்த கல்வி 100% எல்லோருக்கும் கிடைக்கப்பெற்று ஏற்றம் பெறுவார்கள்.
34 ஆண்டு கால கல்விக் கொள்கையை மாற்றி அமைத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்தியப் பேரரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது.
2030க்குள் அனைவருக்கும் தாமான் கல்வி என்ற இலக்கை அடைய புதிய கல்விக் கொள்கை உதவும்.
கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டுவரப்படும். கல்விக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். இணையவழி பாடங்களை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு அவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
கல்வி கற்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.
கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் கட்டணங்களை உயர்த்துவது தடுக்கப்படும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஓரிரு வருடங்கள் தொடர்ந்து படிக்க முடியாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரும் அனுமதி வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கப்படும். ஆறாம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும். இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.
புதிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்ப அடிப்படையிலான ஆன்லைன் கல்வி கல்விக்கான தனி ஆப் டிவி வழிக்கல்வி ஆன்லைன் புத்தகங்கள் ஆன்லைனில் நூலகங்கள் ஆகியவை உலகத்தரம் வாய்ந்த வைகளாக உயர்த்தப்படும்.
அப்ஜெக்டிவ் டைப் டிஸ்கிரிப்டிவ்டைப் அடிப்படையில் ஆண்டு தேர்வுகள் பருவத் தேர்வுகள் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதுவரை எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இருந்த அனைவருக்கும் இலவசகட்டாய கல்வி சட்ட படி 25 சதவீத ஏழை மாணவர்களுக்கான கல்வியை இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசமாக படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் கைத்தொழில்களை கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும்
இளம் வயதிலிருந்தே அனைத்து தொழில்களிலும் நாட்டத்தை உருவாக்கி அவன் எதிர்காலத்தில் சகலகலா வல்லவனாக உருவாக்கி கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற வாழ்க்கை கல்வியை இளம் வயது முதல் கற்றுத்தரப்படும்.
மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் இடையிலே நிற்கும் மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்கு கல்வி கொடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதை உணரச் செய்து புத்தக கல்வி மட்டுமின்றி செய்முறை கல்வியும் விளையாட்டு கல்வியையும் விஞ்ஞானம் தொழில்நுட்ப கல்வியையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
மாநில மொழிகளுக்கு இணையாக புதிய படங்கள் புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்று அவர்கள் சொந்த மாநில மொழிகளில் தொடர்ந்து கல்வி கற்க ஏதுவாக மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படும்.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான பயன்பாட்டிற்காக இந்திய சைகை மொழி நாடு முழுவதும் தரம் உயர்த்தப்படும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் தரமானதாக உயர்த்தி வழங்கப்படும்.
வளர்ந்துவரும் கல்விக்கு ஏற்ப பள்ளி கல்வி அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 5+3+3+4 என்ற புதிய கல்வி அமைப்பு கொண்டு
வரப்பட்டுள்ளது.
ஐந்தாண்டு கல்வி அடிப்படை கல்வியாக மூன்றாண்டு கல்வி ஆயத்த கல்வியாக அடுத்த மூன்றாண்டுகளில் நடுநிலை கல்வியாக அடுத்த நான்காண்டுகளில் உயர்நிலை கல்வி ஆக மாற்றப்படுகிறது ஐந்துக்கும் பத்துக்கும் 12க்கும் தேர்வுகள் நடத்தி மாணவர்களை ஆசிரியர்கள் பாடம் நடத்தி கற்றுக் கொடுப்பதையும் உறுதி செய்வதற்காக தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக தேர்வுகள் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு உயர்கல்விக்கு உரம் சேர்க்கும் வகையில் கல்வியின் மீது தீராத தாகம் மாணவர்களுக்கு வரவேண்டும் என்பதற்காக ஐ.ஏ.எஸ். ஐபி.எஸ். ஐ.எஃப்.எஸ் ஐ.ஐ.எம் ஜே. இ.இ.நீட் போன்ற தேர்வுகளுக்கு அகில இந்திய அளவில் மாணவர்களை தயார் படுத்துவதற்காக அடிப்படை கல்வியை மேம்படுத்தப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வித்துறையில் தற்பொழுது 4.43% ஆக இருக்கும்போது கல்விக்காக இந்திய பேரரசு 6 சதவீதமாக உயர்த்தி மருத்துவம் சட்டம் தவிர்த்து அனைத்து படங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்டங்களை இனிமேல் மத்திய கல்வித்துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பழங்குடியினர் விவகாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நிர்ணயிக்கும்.
வாழ்க்கைத் திறன் கல்வி ஒவ்வொரு ஆண்டும் கற்பிக்கப்படும் .
திறன் அடிப்படையில் ஆசிரியர்கள் மறுமதிப்பீடு செய்யப்படும். இதுகுறித்தமதிப்பீட்டு அறிக்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
சிபிஎஸ்இ கணக்கு தேர்வு போல் அனைத்து பாடங்களும் இரண்டு மொழிகளில் நடத்தப்படும். பொதுஅறிவின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்.
அறிவியல் கணிதம் ஆகியவை கட்டாயம் ஒரு பாடமாக இருக்க வேண்டும். அனைத்து விளையாட்டுகளுடன் ஒழுக்கமும் பண்பாடும் கலாச்சாரமும் பாதிக்கப்படாமல் உயர் கல்வியை மேம்படுத்தப்படும். வர்த்தகமும் அறிவியலும் வேறு பிரிவாக இருக்க வேண்டும்.
ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் தங்களது விருப்ப பாடங்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். தேர்வு மாணவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். இளங்கலை சுயாட்சி கல்வி நிர்வாகம் மற்றும் நிதி சுயாட்சி ஆகியவை கல்லூரிகளில் அங்கீகாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இந்தியாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகள் உள்ளன. தேசிய தேர்வு மையம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேர்வுகள் நடத்தும். இந்த தேர்வுகள் கட்டாயமில்லை. விருப்பப்பட்டால் மட்டுமே நடத்தலாம். இதுவரை தன்னாட்சி பெற்ற டிம்டு பல்கலைக்
கழகங்களுக்கு என்று வேறு வேறு நடைமுறைகள் இருந்தன .இனி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தரம் மற்றும் விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்கும்.
பொறியியல் போன்ற பட்டப் படிப்பில் ஓரிரு வருடம் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுப்பு எடுத்துக்கொண்டு கூட மீண்டும் படிப்பைத் தொடரலாம். .உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழி கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.
3...4 ஆண்டுகள் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புகள் ஓரிரண்டு ஆண்டுகள் நடத்தப்படும் இன்டகிரேடட் இளங்கலை முதுகலை 25 ஆண்டுகள் இளங்கலை முதுகலை இரண்டும் 5 ஆண்டுகள் கடத்த அனுமதிக்கப்படும. உயர் கல்வி நிலையங்களில் தன்னாட்சி உரிமை அளிக்கப்படுகிறது. உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் . M.Phill.படிப்புகள் நிறுத்தப்படும். உள்ளிட்ட பல்வேறு நல்ல விஷயங்களை இந்த புதிய கல்விக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்துஉயர்கல்வித் துறைச் செயலாளர் அமித் கூறுகையில் உயர் கல்வி நிலையங்களில் 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் சேர்க்கையை உயர்த்துவது என்ற புதிய தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்று இருந்ததுஇனிமேல் மத்திய கல்வித்துறை என்று மாற்றப்படுகிறது இது இருபத்தோராம் நூற்றாண்டுக்கான மகத்துவம் வாய்ந்த கல்வி கொள்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கல்விக் கொள்கை குறித்தான பல்வேறு ஆய்வுகளில் இ.பி.எஸ்.ஐ.. இந்திய கல்விக்கான மேம்பாட்டு அமைப்பின் தலைவர் வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் டாக்டர். ஜி. விசுவநாதன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு கல்வியாளர்கள் இந்தியா முழுமைக்கும் உள்ள பல்கலைக்கழக வேந்தர்கள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வரங்கங்கள் நடத்தி கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் அறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தான் இந்த புதிய கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாற்றங்களோடும் எழுச்சியோடும் எல்லோருக்கும் ஏற்றதொரு உலகத்தரமான கல்வியை கிடைக்க வழிவகை செய்துள்ளது.
இதில் யாரும் சுயலாபம் சுய கௌரவம் பார்க்காமல் அரைத்த மாவையே அரைக்காமல் எல்லோருக்கும் இடைநிற்றல் இல்லா தரமான கல்வி கிடைக்கமொழிப் பிரச்சினையை மையமாக்கி சுயநல அரசியல் லாபம் பார்க்காமல் 130 கோடி இந்தியர்கள் நம் எதிர்கால தலைமுறைக்கான வளமான பலமான நலமான தலைமுறைக்காக இந்த புதிய கல்விக் கொள்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவின் மாநில செயலாளர் கே. ஆர் நந்தகுமார் தெரிவித்தார்.