பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கல்வி நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21) வகுப்புகள் ஆன்-லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் அண்மையில் வெளியிட்டிருந்தன.
இதனை கருத்தில்கொண்டு, நிகழாண்டு ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், ஆன்-லைன் வகுப்புகளை பயில வசதியாக, அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் தரும் திட்டத்துக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.