செப்டம்பா் 21ஆம் தேதி ஆா்பாட்டத்திற்கு தயாா் ஆவோம்.....
மரியாதைக்குரிய மாநில மாவட்ட தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
நமது சங்கத்தின் சார்பில் வருகின்ற 21.09.2020 தேதி திங்கட்கிழமை சென்னை பள்ளிக் கல்வி ஆணையாளர் அலுவலகம் முன்பு நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக போஸ்டர் எல்லா மாவட்டங்களில் இருந்தும் கட்டாயம் அடித்து ஓட்ட வேண்டும். அதற்கான மாடல் டிசைனிங் தாங்கள்தான் செய்து ஒட்ட வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
ஏற்கனவே நீங்கள்தான் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதன்முதலாக போஸ்டருக்கு டிசைன் செய்தீர்கள். அதேபோல் நான் கீழே தந்துள்ள போஸ்டர் மேட்டரை மிகச் சிறப்பாக டிசைன் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பினால் எல்லா மாவட்டத்திற்கும் அனுப்பி போஸ்டர் அடிக்க வைத்து ஒட்டவைத்து பிரச்சனையை தீர்த்துவிடலாம்.
போஸ்டர் ஒட்டிய செய்தி அரசின் கவனத்திற்கு சென்றாலே அரசாங்கம் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது உடனடியாக செய்யவேண்டும் செய்து முடிப்பீர்கள் என்று நம்பிக்கையோடு தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
அன்புடன் உங்கள்
நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.
மாதிரி போஸ்டர்
இடதுபுறத்தில் சங்கத்தின் எம்பளம் வரவேண்டும். வலதுபுறத்தில் எனது புகைப்படம் இருக்க வேண்டும். அதற்கருகில் அந்த மாவட்டத்தின் மிக முக்கிய மாநில நிர்வாகி படம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் கீழே மாவட்ட நிர்வாகிகள் படம் வேண்டுமானால் அவர்கள் விரும்பினால் அதற்காக அவர்கள் செலவு செய்தால் போடலாம். இல்லை என்றால் உங்கள் மாவட்டத்தின் பெயரை மட்டும் சங்கத்தின் பெயரோடு இணைத்து போட்டு போஸ்டர் அடித்து அனைத்து BEO DEO CEO Taluk Office Fire Office Sanitary Office Bus Stand பகுதிகளில் கட்டாயம் ஒட்ட வேண்டும்.
சுவரொட்டி மேட்டர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாள்... 21.09.2020 திங்கட்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரை
இடம்... பள்ளிக்கல்வி ஆணையாளர் அலுவலகம் முன்பு.
D.P.I. வளாகம். கல்லூரி சாலை சென்னை. 6.
கோரிக்கைகள்
தமிழக அரசே !
*தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் T.C. இல்லாமல் எந்தப் பள்ளியிலும் எந்த மாணவரையும் சேர்க்கக்கூடாது என்ற அரசாணையை உடனே வெளியிட்டு கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும்.
*இந்தக் கொடிய கொரோனா நோய்தொற்று காலத்தில் தீயணைப்புத்துறை தடையின்மைச் சான்று சுகாதாரச் சான்று
கட்டிட உறுதிச் சான்று கட்டிட உரிமைச் சான்று பெறுவதற்கு பல்லாயிரக்கணக்கில் செலவழித்தாலும் உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடிப்பதால்.... தமிழக அரசின் ஆணைப்படி அனைவருக்கும் உடனடி தொடர் அங்கீகாரத்தை எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடியாக வழங்கிட வேண்டும்.
*அரசாணை 101 ன்படி தொடர்அங்கீகார ஆணையை நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு DEO அலுவலகமும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு CEO அலுவலகங்கள் மூலம் தொடர் அங்கீகாரம் வழங்க பல்வேறு கால தாமதங்கள் சிரமங்கள் அலைகழிப்புகளால் பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படுவதால் G.O No 101ஐ ரத்து செய்து பழையபடியே மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அவர்களே தொடர் அங்கீகாரத்தை வழங்கிட ஆவண செய்ய வேண்டுகின்றோம்.
*கடந்த 3ஆண்டுகளாக அங்கீகார ஆணையை மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .கே. ஏ. செங்கோட்டையன் அவர்களின் கைகளாலேயே பள்ளி நிர்வாகிகளுக்கு செலவில்லாமல் தொடர்அங்கீகார ஆணையை வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும் அங்கீகார அணையை அமைச்சர் அவர்களே உடனே எல்லா பள்ளிகளுக்கும் வழங்கும்படி செய்ய வேண்டும்.
*இந்தக் கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்திலாவது தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழக அரசின் பாடப் புத்தகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கைகளால் வழங்கிட வேண்டும் Tamil NaduPrivate School Regulation Schools Act 2018.Self Finance School Directorate ஐ உடனே அமுல்படுத்து.
என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்
.(மாவட்ட நிர்வாகிகளின் பெயர் படம் விரும்பினால் போட்டுக்கொள்ளலாம் அதற்கான செலவுகளை அவர்கள் ஏற்கலாம்) இதேபோல் போஸ்டரை 38 மாவட்டங்களுக்கும் தயார் செய்து டிசைன் செய்து அனுப்புங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் ஒரேமாதிரி இதேபோல் சுவரொட்டிகளை அச்சடித்து ஊட்டுவதற்காக ஏற்பாடுகளை செய்யலாம்
தயவுசெய்து ஒரு டிசைன் செய்து உ்ஙகள் மாவட்டத்தின் பெயரை போட்டு. வாட்ஸ்அப் குழுவில் அனுப்பினால் எல்லோருக்கும் ஒரு வேகம் வந்துவிடும். இந்தப் போராட்டத்தின் வெற்றி முழுக்க தங்களின் அற்பணிப்பால் மட்டுமே சாத்தியப்படும் செய்து முடிப்பீர் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.
அன்புடன் உங்கள்
நந்தகுமார்.