11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு



11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


தமிழகத்தில் புதிதாக தொடங் கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி களில் அடுத்த ஆண்டு (2021-22) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சவீதா மருத்துவ, தொழில்நுட்ப அறிவியல் நிறுவன 15-வது இணையவழி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டு தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 17-ல் இருந்து 16 ஆகவும் பேறுகாலத்தில் தாய்மார் இறப்பு விகிதத்தில் 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, இப்போதே அடைந்துவிட்டதும் சாதனை. நாட்டிலேயே அதிக அளவாக தமிழகத்தில் மட்டுமே 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவ மனையில் நடைபெறுகின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் 5 ஆண்டு களாக தொடர்ந்து மிகச்சிறந்த மாநிலத்துக்கான விருதை பெற்று வருகிறது. உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கிடைத்துள் ளது.

தமிழக அரசு மருத்துவமனை களில் புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில், ரூ.190 கோடியில் உயர் தொழில் நுட்பக் கருவிகள் நிறுவப்பட்டு வருகின்றன. அடையாறு புற்று நோய் மையத்தை ரூ.120 கோடியில் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது.

காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.120 கோடி மதிப்பில் மேன்மை மிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உயர்தர மருத்துவ சேவைகளை வழங் குவது மட்டுமின்றி, மிகச்சிறந்த மனித வளம், கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும் தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்வதால், இந்தியாவின் மருத்துவ தலை நகரமாகவும் தமிழகம் திகழ்கிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள 3,250 மருத்துவப் படிப்பு இடங் களுடன், புதிதாக தொடங்கப் பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி களுக்கான 1,650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கும் சேர்த்து 2021-22 ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.