நாளை முதல் 10ஆம் வகுப்பு சான்றிதழ் விநியோகம்....!

நாளை முதல் 10ஆம் வகுப்பு சான்றிதழ் விநியோகம்....!


கடந்த 10ஆம் தேதி வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்படி, இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையிலே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது தேர்வுத் துறை அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டியல், அந்த மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உள்ளிட்டவற்றைச் சரிபார்த்து, தலைமை ஆசிரியர்கள் குறித்த தகவல்களைப் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களில் தவறு ஏதும் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும்.







பிழைகள் எதுவும் இருந்தால், தலைமை ஆசிரியர் திருத்தங்களைச் செய்து சான்றொப்பமிட்டு அதை விநியோகம் செய்யலாம். இந்த சான்றிதழ் விநியோகத்தின் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.







இந்த சான்றிதழ் விநியோகம் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடக்கும். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.