பள்ளி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10ல் முதல்வர் அறிவிப்பு...!
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை, வரும், ஆகஸ்ட்10ம் தேதி, முதல்வர் வெளியிடுவார்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக அரசுப்பள்ளி ஆசிாியா்களுக்கு ஆதரவாக வெளிவருகின்ற ஒரு இணயதள இதழ் தகவல் தொிவித்துள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தொியவில்லை. இப்படி ஒரு அறிவிப்பு வருமானால் அது அனைத்து பள்ளிகளுக்கும் சோ்த்துத் தான் இருக்கும். எனவே அனைத்து பள்ளி நிா்வாகிகளும் எதற்கும் தயாராக இருங்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் கலை அறிவியல் கல்லூாிகளில் ஆன்லைன் மூலம் மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவை தமிழக அரசு முடித்துள்ளது. விரைவில் இதற்கான மாணவா் சோ்க்கை தொடங்க உள்ளது.
அதேப்போன்று அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்போடு ஆன்லைனில் ஆா்.டி,இ, மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக முதல்வா் அறிவிப்பாா் என்கிற எதிா்பாா்ப்பு நிலவுகின்றது.