10ம் வகுப்பு மதிப்பெண்கள்: இந்த வாரம் வெளியிட முடிவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரத்தை, இந்த வார இறுதிக்குள் வெளியிட, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சராசரி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, மாநிலம் முழுதும் மாணவர்களின் மதிப்பெண்கள், பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை, முதல்வரின் ஒப்புதலுக்கு, அரசு தேர்வுத் துறை சமர்ப்பித்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.மதிப்பெண் பட்டியல் வெளியானதும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று வரை பத்தாம் வகுப்பு தோ்ச்சி விவரத்தை மதிப்பெண் அடிப்படையில் வெளியிடுவதா அல்லது கிரேடு முறையில் வெளியிடுவதா என்கிற பொிய குழப்பம் பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வந்தது.
இது தொடா்பாக நமது சங்கத்தின் சாா்பில் அரசுக்கு ஒரு கோாிக்கை மனுவை அனுப்பியுள்ளோம். அதை மெட்ரிக்குலேசன் நியூஸில் செய்தியாக கூட வெளியிட்டுள்ளோம். இதுவரை வெளிவந்த 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் கிரேடு போடவில்லை மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுதான் சாியான முறை மாணவா்கள் மேற்படிப்பு படிப்பதற்கும் பிற்காலத்தில் வேலைவாய்ப்பிற்கும் இது தான் உதவும் கிரேடு சிஸ்டம் உதவாது என்று குறிப்பிட்டிருந்தோம்.
நமது கோாிக்கை தமிழக அரசால் பாிசீலிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் அடிப்படையிலே தோ்வு முடிவிகளும் வெளிவர உள்ளது.
வெற்றி பெறும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்...