+1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பள்ளியிலிருந்து நீக்கக் கூடாது

+1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பள்ளியிலிருந்து நீக்கக் கூடாது


11 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், பிளஸ் 2 படிப்பை தொடரலாம்; அவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கக் கூடாது' என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைகள்:


தமிழக பள்ளிக் கல்வித் துறை விதிகளின் படி, பிளஸ் 1 தேர்வில், சில/பாடங்களை எழுதாவிட்டாலும், தேர்வு எழுதிய சில பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 படிக்கலாம். மற்ற மாணவர்களை போல, அவர்கள் பிளஸ் 2வில் தினமும் பள்ளிக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்கலாம்.


அனைத்து வகை கற்றல் பணிகளில் பங்கேற்கவும், அரசின் சலுகைகளை பெறவும் அவர்களுக்கு அனுமதி உள்ளது. அதேநேரம், தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, துணை தேர்வு வழியாகவோ அல்லது அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு வழியாகவோ, தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.


பிளஸ் 2 முடிக்கும் போது, பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தேர்ச்சி பெறாவிட்டால், பிளஸ் 2 முடியும் போது ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாது. இதை மாணவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை பிளஸ் பிளஸ் 1ல் தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் முயற்சித்து எழுதி, தேர்ச்சி பெறவும் ஆலோசனை வழங்க வேண்டும். 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, பள்ளியை விட்டு நீக்குவது சட்டப்படி குற்றம். இதை, பள்ளி நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளார்.