புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் – இன்று வெளியீடு

புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் – இன்று வெளியீடு


நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று மாலை அந்த புதிய கல்வி கொள்கைகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்வதற்கு கூடுதலாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோன ஊரடங்கு காலத்தில் கல்வி குறித்த செயல்பாடுகள் பெரும் சிக்கல்களை சந்திப்பதனாலும், அதனை மேம்படுத்த இவ்வாறு புதிய கல்வி கொள்கை மாறும் கல்வி அமைச்சகம் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.

மேலும் இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை குறித்த விபரங்களை அமைச்சர்கள் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட உள்ளனர்.