அம்மா உணவகம் போல அம்மா ஸ்கூல் கிடைக்குமா? இணையத்தில் இன்றைக்கு இதுதான் பிரபலம்.....!
இந்த சிறுவனிடம் இந்த தட்டி போர்டு கொடுத்தது யார்?
வளரும் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் நக்சல்கள் யார்?
குழந்தைகள் இல்லாமல் அரசுப்பள்ளிகள் ஒவ்வொன்றாய் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன ..
அரசுப் பள்ளியில் படிப்பது அவமானமாக பார்க்கப்படுகிறது ..
மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியரிடம் படிப்பதைவிட..
மாதம் 6000 ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியரிடம் படித்தாலே அறிவு வளரும் அந்தஸ்து கிடைக்கும் என இந்த சமூகம் நம்புகிறது ...
அரசு பள்ளி ஆசிரியர் சமூகமும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கே அனுப்புகிறது ..
ஆட்டோ ஓட்டுநரும் கொத்தனாரும் தனது தினசரி வருமானத்தை எல்லாம் தனியார் பள்ளியில் கொட்டி ஆண்டு ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர் ..
அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் . ஒரு காசு செலவில்லாமல் குழந்தை பெறுவதுடன் . ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் .. 22 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கிடைக்கிறது ...
ஆனாலும் நம் சமூகம் அதே அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரின் தனியார் கிளினிக்கில் ஒரு லட்ச ரூபாய் கட்டி பிரசவம் பார்ப்பதையே பெருமையாக பீத்துகிறது.. .
அரசுப்பள்ளி... அரசு மருத்துவமனைகளை தாழ்த்தப்பட்டலைகளாக.. அருவருப்பாய் பார்த்துக்கொண்டே .. கல்வி வியாபாரமாகி விட்டது என்று கொடி பிடிப்பதும் .. இலவச மருத்துவம் வேண்டும் என்று கோஷம் இடுவதும் ... நக்சல்களின் பின்னால் ஆட்டு மந்தையாக நிற்பதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது ..
இதில் வேறு ஏதாவது நாலாந்தர சினிமா நடிகை வந்து .. கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள் .. பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் பராமரியுங்கள் என்று அறிவுரை சொல்லுவாள் அவளுக்கும் ஒரு ஓ போட்டு கோவில் கட்டுங்கள் .. அவளுடைய கணவனுக்கு கட்டவுட் வையுங்கள் ..
முதலில் நாக்கு கழுவாத இந்த நக்சல்களின் வாய் வாடை வார்த்தைகளை பொதுக் கழிப்பறை விளக்குமாற்றால் பொறுக்கி அப்புறம் எறியுங்கள் ..
பிறகு நாம் ஏன் அரசுப் பள்ளி அரசு மருத்துவமனைகளை புறக்கணிக்கிறோம் என்பதை ஆராயுங்கள் ..
தனியார் மருத்துவமனை தனியார் பள்ளிகளை விட 6 மடங்கு அதிக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் அலட்சியமாக இருந்தால் கேள்வி கேளுங்கள் .. தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள் .. புகார் செய்ய பழகுங்கள் .. கட்டடங்கள் மருத்துவக் கல்வி உபகரணங்களுக்கு ஆகும் அரசு செலவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேளுங்கள் ..
உங்கள் குழந்தை இலவசமாக படிக்கவில்லை.. நீங்கள் இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை .. தனியார் பள்ளி தனியார் மருத்துவமனைகளில் செலவழிக்கும் தொகையை விட அரசாங்கம் உங்களுக்காக நான்கு மடங்கு அதிக தொகையை செலவழிக்கிறது அது உங்கள் வரிப்பணம் .. அந்த வரி பணத்தை செலவிட அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது உங்கள் ஓட்டு ..
இந்திய நாட்டின் மிகப்பெரிய சக்தி ஓட்டு...
அதேநேரம் .. நல்லா ஆசிரியர்களையும் நாணயமான மருத்துவர்களையும் தெய்வமாக வணங்குங்கள் .. அரசு மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் ஆலயங்களாக போற்றுங்கள் ..
.
இணையத்தில் கிடைத்தது