பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி


அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன.


இதைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு, இன்றே கடைசி நாள். இதுவரை, 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். விண்ணப்பப் பதிவு காலத்தை, இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.இதற்கிடையில், விண்ணப்பங்களை பதிவு செய்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் ஒளிப்பதிவுகளை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம், நாளை துவங்க உள்ளது.


வரும், 10ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.கூடுதல் விபரங்களை, http://tngasa.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.