மேற்படிப்புக்கு ஆயத்தமாகும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு அன்பான வேண்டுகோள்

மேற்படிப்புக்கு ஆயத்தமாகும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு அன்பான வேண்டுகோள்....


• நீங்கள் பொறியியல் படிப்பினை தேர்வு செய்ய ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் எங்கள் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற உற்ற நம்பிக்கையில் உங்களின் முன்னேற்ற பாதையில் நாங்களும் பங்கெடுக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் இப்பதிவினை இடுகின்றோம்.


• பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி திருக்குவளை, இக்கல்லூரியானது கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தங்களின் பொறியியல் கல்வி கனவை நனைவாக்கும் பொருட்டு 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு பொறியாளர்களை தரத்துடன் உருவாக்கி வருகிறது.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரியானது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் என்ற இருமாவட்டங்களுக்கும் பொதுவாக இயங்கி வரும் ஒரே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி என்ற பெருமையையும், அரசு இணைவு பெற்று குறைந்த கட்டணத்தில் நிறைவான கல்வியை தருகின்ற கல்லூரி என்ற பெருமையும் பெற்றதாக இயங்கி வருகிறது.


• எழில் சூழ்ந்த இயற்கை வளங்களுடன் கிராமப்புற சூழ்நிலையில் சுமார் 41 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி அமையப்பெற்றுள்ளது. இக்கல்லூரியானது நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் அமைந்திருப்பதும் இம்மூன்று முக்கிய ஊர்களிலிருந்தும் போதிய அரசு பேருந்து வசதிகள் திருக்குவளைக்கு இருப்பதும் தனிச்சிறப்பு.


• இக்கல்லூரி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக இருப்பதால் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கல்விக்கட்டணம் மட்டுமே இங்கு வசூலிக்கப்படுகிறது. மேலும் முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்கள் மற்றும் SC/ST மாணவர்களுக்கு உரிய கட்டணச் சலுகைகள் முழுமையாக வழங்கப்படுகிறது.


• இக்கல்லூரியில் B.E - சிவில் இன்ஜினியரிங், B.E - கம்ப்யூட்டர்  சயின்ஸ் அண்ட்  இன்ஜினியரிங், B.E  - எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்  இன்ஜினியரிங்,  B.E - எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், B.E  -மெக்கானிக்கல்  இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது.


• பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு எளிதில் பொறியியல் கல்வியை புரிந்து படித்து பட்டம் பெற இயலும் பொருட்டு B.E  - சிவில் இன்ஜினியரிங் மற்றும் B.E  -மெக்கானிக்கல்  இன்ஜினியரிங் ஆகிய இருபாடப்பிரிவுகளும் தமிழ்ப்பிரிவில் நடத்தப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மேலும் இத்தமிழ்வழிக்கல்வியில் பொறியியல் பட்டம் பெற்று செல்லும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் தமிழக அரசினால் 20% முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற உண்மையை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் கடமைப்பட்டுள்ளோம்.


இத்தமிழ்வழி பயிலும் மாணவர்கள் பல்கலைத்தேர்வுகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தங்கள் விருப்பம் போல் எழுதிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் பலர் தொழிற்சார்ந்த முன்னணி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.


• மேலும் எண்ணற்ற மாணவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெற்று பல்வேறு அரசுத்துறைகளிலும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர் என்பதை நாங்கள் பெருமையோடு கூறிகொள்கிறோம்.


• இக்கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்ற உதவி பேராசிரியர்கள் சிறந்த கட்டமைப்புடன் உள்ள ஆய்வகங்கள் உள்ளமையால் நல்ல தொழில்நுட்ப திறன் மாணவர்களிடையே சென்றடைகிறது. இதனால் மாணவர்களின் பன்முக திறன் அதிகரித்து மிக எளிதாக வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.


• நூலகமே ஆலயம், நூல்களே நம் ஆசான்  என்ற கூற்றுக்கு இணங்க இக்கல்லூரி நுலகமானது, பல்வேறு பொறியியல் துறைச் சார்ந்த 15,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், இதழ்கள்  மற்றும் மின்னணு  புத்தகங்கள் (E -book ) நிறைந்து அறிவூட்டும் களஞ்சியமாகத் திகழும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கென தரமான RO குடிநீர் வசதி செய்யப்பட்டு, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறது. வெளியூர்களிருந்து வந்து  தங்கி படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கென தனித்தனி விடுதிகள் கல்லூரியிலேயே அனைத்து வசதிகளுடன் அமையப் பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.


•  ஏட்டுக்கல்வியுடன் அனுபவக்கல்வியையும், சமூகச் சிந்தனைகளையும் மற்றும் சூழ்நிலையோடு இயைந்து தொண்டாற்றும் பன்முகத்திறனையும் மாணவர்கள் பெற்று அவர்கள் சமூக ஆர்வலர்களாக திகழும் பொருட்டு நாட்டு  நலப்பணித்திட்டம்(NSS), தேசிய செஞ்சுலுவைச் சங்கம் (RRC ) மற்றும் செஞ்சுருள் சங்கம் (YRC) போன்ற சிறந்த சேவை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.


கிராமப்புற மாணவர்களும், நகரத்தில் உள்ள பெரிய பன்னாட்டு  நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெரும் பொருட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுதுணையுடனும் மட்டும் டைட்டன் நிறுவனத்தின் நிதி உதவியுடனும், மஹிந்திரா தொழில் நுட்ப நிறுவனம் தங்கள் நிறுவன திறன் பயிற்றுனர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இக்கல்லூரியிலே திறன் மேம்பாட்டு பயிற்சியினை ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் மற்றும் நான்காம்  ஆண்டு மாணவர்களுக்கு  வழங்கி வருகிறார்கள் என்பது மிகப்பெரிய பெருமைக்குரியதாகும்.


• பொறியியல் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் எம் கல்லூரி மாணவர்கள் மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுகள் பலவற்றிலும்   பங்கு பெற்று வெற்றி பெற்றுவருகின்றனர்.


• இவ்விவரங்கள் அனைத்தும் +2 படித்து முடித்தவுடன் மேற்படிப்பை பொறியியல் கல்வியில் தொடங்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடனே தாங்களுக்கு அனுப்புகின்றோம். இதனை தங்களுடன் படிக்கின்ற மாணவர்களுக்கும், தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் இத்தகவல்களை மிக அதிக அளவில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


இதன் மூலம் பொறியியல் கல்வியை தங்கள் கனவாக நினைக்கும் ஏழை, எளிய மாணவர்களும் கூட இப்பயனுள்ள விவரங்கள் கிடைக்கப்பெற்று பயனடைய வாய்ப்புள்ளமையால் , நாங்கள் அனுப்பிய இவ்விவரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து மற்றவர் பயனுற உதுவும்படி கேட்டுக் கொள்கிறோம்


இக்கல்லூரியைப் பற்றிய விவரங்களை கீழ்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணிலும், இணையதள முகவரியிலும் மற்றும் மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவும் கேட்டும், பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.


முகவரி: University College of Engineering, Thirukkuvalai


   (A Constituent College of Anna University)   
::Approved by AICTE, New Delhi
Thirukkuvalai
Nagapattinam - 610204.


தொலைப்பேசி : 04366-245235 மற்றும் 04366-245245


மின்னஞ்சல் (E - mail): deantkly@gmail.com


இணையதள முகவரி : www.aucetk.edu.in


 கல்லூரி கவுன்சிலிங் எண்: 3018


குறிப்பு: இக்கல்லூரி. திருவாரூர் நகரத்திலிருந்து 23 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 28 கி.மீ தொலைவிலும்,திருத்துறைப்பூண்டியிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது .இம்மூன்று ஊர்களிலிருந்தும்  அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் இக்கல்லூரிக்கு  உள்ளன.


 காா்த்திக் - நாகை