நீட் தேர்வு ரத்தா, ஒத்திவைப்பா? -அமைச்சரின் அறிவிப்பால் தீர்ந்தது குழப்பம்!!

நீட் தேர்வு ரத்தா, ஒத்திவைப்பா? -அமைச்சரின் அறிவிப்பால் தீர்ந்தது குழப்பம்!!



2020-21 கல்வியாண்டில், மருத்துவப்படிப்பு (எம்பிபிஎஸ்) மாணவர் சேர்க்கைகான நீட் தகுதித் தேர்வை ஜூலை 26 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால், கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டப்படி இந்தத் தேர்வை நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

 

இதன் காரணமாக, இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி விண்ணப்பதாரர்கள், அவர்களின் பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்திருந்தது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியா இன்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக நடத்தப்படும் ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.