நியாமான கட்டணத்தை வழங்க வேண்டும். கல்விக் கட்டண நிா்ணயக்குழுத் தலைவருக்கு பொதுச்செயலாளா் கோாிக்கை

நியாமான கட்டணத்தை வழங்க வேண்டும். கல்விக் கட்டண நிா்ணயக்குழுத் தலைவருக்கு பொதுச்செயலாளா் கோாிக்கை


அனுப்புதல் 


கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி  தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம், க.எண்..6. ஏகாம்பரம் தெரு ...பம்மல்...அஞ்சல் சென்னை .75.... கைபேசி எண் 944 39 640 53 .Email ID matriculationnews2011@gmail.com.


பெறுதல்...


மாண்புமிகு. நீதியரசர். ஐயா. திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள்.


தலைவர் சுயநிதி பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய குழு.


டி பி ஐ வளாகம் கல்லூரி சாலை சென்னை-6.


பொருள்.....


தனியார் சுயநிதி பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டி வேண்டுதல் விண்ணப்பம்....


ஐயா வணக்கம்.... 


தனியார் சுயநிதி பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவராக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் மிகச் சிறப்பாக பணியாற்றி நீதியை நிலைநாட்டிய பெருமைக்குரிய மாண்புமிகு நேர்மைமிகு. நீதியரசர் பெருந்தகை ஐயா அவர்களை எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வருக வருக என இருகரம் கூப்பிஎங்கள் தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவராக பொறுப்பேற்க வாருங்கள் என்று வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.


மத்திய மாநிலஅரசிடமிருந்து 5 காசுகள் கூட நிதி உதவி பெறாமல் எந்தவித பயிற்சியும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு வழங்குமலேயே அரசின் பெரும் பணச் சுமையையும் பணிச்சுமையையும்  குறைத்து லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி தந்து தமிழ் நாட்டை தலைநிமிறச் செய்வதில் தனியார் பள்ளிகளின் பங்கு அபரிமிதமானது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.


இந்தச் சூழலில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ஆண்டுதோறும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. தற்போது 90 சதவீதம் பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி மெட்ரிக் பள்ளிக் கல்வி இயக்குனரிடமிருந்து உரிய அங்கீகார ஆணை எந்தப் பள்ளிக்கும் வரவில்லை. அங்கீகாரத்திற்காக விண்ணப்பிப் பதற்கான இணையதளம் கூட நீண்ட காலமாக இயக்குனரகம் திறந்து வைக்கவில்லை. நாங்கள் இப்படி தொடர் அங்கீகாரத்தைப் பெறமுடியும்.


அங்கீகாரம் இல்லை என்றால் தாங்கள் கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள். எனவே அங்கீகாரம் முடிந்தவுடன் அங்கீகாரம் தர வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்த மேற்கண்ட இயக்குனர்கள் உடனடியாக தொடர் அங்கீகாரத்தை புதுப்பித்து அனுப்பியபின் தாங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அல்லது ஆண்டுதோறும் அங்கீகாரம் தரும் முறையை ரத்து செய்துவிட்டு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் தருவதை அய்யா நீங்கள் உறுதி செய்திட வேண்டும்.


தொடர்அங்கீகாரம் இல்லையென்றால் பள்ளி வாகனங்கள் கூட தகுதிச் சான்று பெற முடியாது என்று விதி உள்ளதால் உடனடியாக எந்தவித நிர்பந்தமும் நிபந்தனையும் இல்லாமல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கிகாரத்தை உடனே வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றோம்.


கடந்த காலங்களில் பல்வேறு குளறுபடிகள் தனியார் சுயநிதி பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவால் நிகழ்த்தப்பட்டதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். வருங்காலங்களில் அவ்வாறு குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பாக தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். குறைந்தபட்சம் பள்ளி நிர்வாகிகளைகுற்றவாளிகளைப் போல் நீதிமன்றங்களில் நடத்துவதைப் போல் நடத்தாமல் எங்கள் குறைகளையும் தேவைகளையும் பிரச்சனைகளையும் கேட்டுத் தெரிந்து நாங்கள் தரும் ஆவணங்களை ஏற்று எங்களுக்கு உரிய நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து தரவேண்டும்.


நீங்கள் கேட்கும் எல்லா ஆவணமும் அங்கீகாரம் பெறும் போதே சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் முலம் கேட்டு வாங்கித்தான் தனியார் பள்ளிகளை பார்வையிட்டுத்தான் தொடர் அங்கீகாரத்தை சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநர்கள் அங்கீகாரத்தை புதுபித்து தருகிறார்கள். 


எனவே அவர்கள் கேட்ட எல்லா ஆவணங்களையும் தாங்கள் மீண்டும் கேட்காமல் கல்வி கட்டணத்தை நிர்ணயித்து தரவேண்டும். அதுமட்டுமல்ல தனியார் சுயநிதி பள்ளிக் கல்வி கட்டண நிர்ணய குழுவில் பணியாற்றும் யாரும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆடிட்டர்கள் இல்லை. அவர்கள் யாரும் பள்ளிக்கல்வித் துறை அலுவலக கணக்காளர்களும் அல்ல அவர்களுக்கு நாங்கள் தரும் எந்த கணக்கும் தெரிவதில்லை.. .பள்ளி நிர்வாகிகள் தரும் கணக்கை அவர்கள் ஏற்பதும் இல்லை.


இந்தச் சூழலில் தமிழக அரசு  பள்ளிகளில் படிக்கும் ஒரு மாணவனுக்கு அரசு எவ்வளவு கல்விக்கட்டணம் செலவழிக்கிறதோ அந்தக் கட்டணத்தையே கல்வி கட்டணமாக நிர்ணயித்துவிட்டால் காலநேரம் பணவிரயம் மிச்சம் ஆவது மட்டுமல்ல  பள்ளி நிர்வாகிகளுக்கு மாபெரும் மன உளைச்சல் இல்லாமல் ஆண்டுதோறும் அலையாமல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இணையதளம் வழியாகவே கல்வி கட்டணத்தை நிர்ணயித்து தந்துவிட வேண்டும். 


நீங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் போதவில்லை என்றால் அதிகமான வசதிகளை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தால் கூடுதல் கட்டணம் வேண்டும் என்று நினைக்கிற பெரியபள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளியில் உள்ள ஆவணங்களை நேரில் வந்து தங்களிடம் காட்டி உரிய அதிகபட்ச கல்வி கட்டணத்தை பெற்றுக்கொள்ள தாங்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்.


ஆண்டு தோறும் அரசு பள்ளிகளுக்கு எந்தவித அங்கீகாரம் புதுப்பித்தல் அதற்கான சான்றுகள்  பெற வேண்டியதில்லை. அவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போல் வேறு  எந்த செலவும் இல்லை. ஆனால் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் எல்லா துறையிலும் பல்வேறு சான்றிதழ்களை பெற பல் துறை அதிகாரிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் கையூட்டாக செலவழிக்க வேண்டும்.


அதை எல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு எங்களால் ரசீதுகள் வைக்க முடியாது. எனவே தான் கேட்கிறோம் அரசு ஒரு மாணவனுக்கு செய்யும் செலவை கல்வி கட்டணமாக நிர்ணயித்து விட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எக்காலத்திலும் வராது சட்டப்படி மட்டுமல்ல நேர்மை தவறாமல் நாங்கள் கல்வி பணியாற்றுவதற்கு நீங்கள் நல்ல வழிகாட்டியதாக இருக்கும்.


சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ போன்ற கல்வி வாரிய பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை உயர்நிலை பள்ளி நிர்வாகிகள் மட்டும் அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் கல்விக் கட்டணம் நிர்ணயிக்க விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.ஆனால் தாங்கள் விண்ணப்பிப்பதற்கு தங்கள் அலுவலக இணையதளம் எதுவும் வேலை செய்வதில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.


இந்தக் கொடிய கொரோனா நோய் தொற்று கிருமி காலத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காரணத்தால் எந்தச் சான்றும் பெற முடியாமல் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்கள்.


எனவே எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை  பள்ளிகள் சங்கம் போட்ட வழக்கில் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்பின்படி கல்வி கட்டணம் பழைய பள்ளிகள் அனைத்துக்கும் எட்டு மாதங்களுக்குள்ளாக கல்வி கட்டணத்தை நிர்ணயித்து தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


அந்த வழக்கில் எங்கள் வேண்டுகோளே ஏற்று அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவழிக்கிறதோ அதையே RTE சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்து விடும் வகையில் அதற்கான கல்வி கட்டணமாக அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவழிக்கிறது அந்த கட்டணத்தை பாருங்கள் என்றுதான் வழக்கு போட்டுள்ளோம்.அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்தகோரிக்கை மனுவினை தங்களுக்கு பணிந்து அனுப்பி வேண்டுகின்றோம்.


மாண்புமிகு நீதியரசர் எங்கள் தனியார் பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவர் அய்யா அவர்கள் அருள்கூர்ந்து அரசு ஒரு மாணவனுக்கு அரசு எவ்வளவு செலவழிக்கிறதோ அந்த கட்டணத்தையே கல்வி கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கும் நிர்ணயித்து தந்துவிட்டால் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்.


அந்தக் கட்டணத்தையே 50% பள்ளிகள் வசூலிக்க முடியாது. கிராமப்புறங்களில் பெற்றோர்கள் கொடுப்பதை கொடுக்கிறபோது வாங்கிக்கொண்டு தான் பள்ளியை நடத்துகின்றோம்.


எங்கள் பள்ளிகள் எதுவும் அரசு விதிகளுக்கு புறம்பாக நன்கொடைகள் வசூலித்து பெற்றோர்களை கசக்கி பிழிந்து நன்கொடைகள் வசூலிக்கும் கார்ப்பரேட் பள்ளிகளாக நாங்கள் இல்லை என்பதை தங்களுக்கு மெத்தப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 


அப்படிப்பட்ட பள்ளிகள் எது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் மீது வேண்டுமானால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்... நாங்கள் வேண்டாம் என்று எக்காலத்திலும் சொல்ல மாட்டோம். எங்களுக்குரிய நியாயமான கல்விக்கட்டணம் கிடைக்க நியாயமான நீதிஅரசர் எங்கள் பக்கம் கருணை கூர்ந்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சுமையாக இல்லாத அரசு ஒரு மாணவனுக்கு செலவு செய்யும் கட்டணத்தையே கல்வி கட்டணமாக நிர்ணயித்து தந்துவிட்டால்


எங்கள் பள்ளி எங்கள் பெற்றோர் எங்கள் ஊர் சூழலுக்கு ஏற்றாற்போல் நாங்கள் தவணை முறையில் கூட பெற்றோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி தரமான கல்வியை தந்து தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம் என்கிற உறுதியை தங்களுக்கு தெரிவித்துக்கொள்
கின்றோம்.


எனவே தாங்கள் வழங்கியுள்ள இந்த குறுகிய காலத்தில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. போக்குவரத்து வசதிகள் கிடையாது. இது ஊரடங்கு காலம். எந்தச் சான்றும் எந்த துறையிடம் இருந்தும் பெறமுடியாது.


 தொடர் அங்கீகாரம் 90 சதவீத பள்ளிகளுக்கு இல்லை. குறைந்தபட்ச கட்டணம் வாங்கி பள்ளிகளை நடத்த முடியாது. எனவே அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவழிக்கிறதோ அந்த கட்டணத்தையே நிர்ணயித்து தந்து விட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் புகார்கள் இல்லாமல் போராட்டங்கள் இல்லாமல் யார் மனமும் புண்படாமல் எல்லோருக்கும் எப்போதும் தரமான கல்வி கிடைக்க ஏதுவாகும் என்கிற எங்கள் கோரிக்கையை தயவுசெய்து செவிமடுத்து எங்களுக்கு உரிய நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அனைத்து தனியார் பள்ளிகளுக்குமான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்த  ஆணையை தாங்கள் அனுப்பியோ வெளியிட்டோ ஆதரிக்க வேண்டுமாய் எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். 


நன்றியுடன் உண்மயுள்ள 


கே. ஆர்.நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்.


சென்னை, பம்மல்.


நாள் 25. 07. 2020.