அரசு திரைப்பட கல்லூரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு திரைப்பட கல்லூரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு



தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் திரைப்பட கல்வி நிறுவனமாக 50 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனம் ஆனது கடந்த 2016-2017 கல்வியாண்டு முதல் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.


இப்பொழுது அந்த பல்கலைக்கழகத்தில் திரைப்பட தொழில்நுட்பங்கள் மற்றும் காணொளி காட்சிகள் குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு தொழிநுட்பங்களுக்கான இளங்கலை பாடப்பிரிவுகள் ஆகியவை நடத்தப்படுகிறது.

தற்போது அதற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.