திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக, “ஊடகப் பணியாளர்களுக்கு உறுதுணை

 திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக, “ஊடகப் பணியாளர்களுக்கு உறுதுணை



21 ஜூலை 2020, செவ்வாய் கிழமை அன்று,  தமிழ் நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின்  திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக, “ஊடகப் பணியாளர்களுக்கு உறுதுணையாக…” என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு செய்திகள் வழங்க களத்தில் நிற்கும் ஊடகப் பணியாளர்களுக்கு, அவர்களுடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள 22 வகையான உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட ஊடகப் பணியாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


இந்த இனிய நிகழ்வில் தமிழ் நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின்  திருவள்ளூர் மாவட்ட தலவர் முனைவர் N.ராஜன் அவர்களும், செயலாளர் முனைவர் N.மணிவண்ணன் அவர்களும், பொருளாளர் N.கணேசன் அவர்களும், துணைத் தலைவர் முனைவர் சிமியோன் D விக்டர் அவர்களும், இணை செயலாளர் முனைவர் ரெங்கநாதன் அவர்களும், ஐயப்பா நர்சரி & பிரைமரி பள்ளி தாளாளர் அவர்களும் மற்றும் எலைட் பள்ளி குழுமத்தின் முதன்மை நிர்வாகி முனவர் G.பால் செபாஸ்டியன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். 


இவண்
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்